எதிர்நீச்சலில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்! அய்யய்யோ இவரா இவரு பயங்கரமான ஆளாச்சே!
Ethirneechal Director Entry On Today Episode -சன் தொலைக்காட்சியில் பெண்களை முன்னிறுத்தி அவர்களின் தரப்பு நியாயங்களை எடுத்து கூறும் வகையிலான காட்சிகளுடன் மிகச் சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். வழக்கமான மாமியார் மருமகள் சண்டை, குடும்பத்தைக் கெடுக்கும் எதிரிகள், கணவனை கொலை செய்தல், கர்ப்பத்தை கலைத்தல், குழந்தை கடத்தல் என சீப்பான சீன்கள் இல்லாமல் நிகழ்வுக்கு ஏற்ற வகையில், சிறப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத திருப்பங்களையும் ரசிகர்களுக்கு தந்து அழகாக நகர்த்திச் செல்கின்றார் இயக்குநர்.
கோலங்கள் எனும் மாஸ் மெகா தொடரை இயக்கிய திருச்செல்வம்தான் இப்போது எதிர்நீச்சல் தொடரையும் இயக்கி வருகிறார். இந்த தொடர் இப்போது 500 எபிசோட்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
வழக்கமாக அவர் இயக்கும் தொடர்களில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் திருச்செல்வம், எதிர்நீச்சல் சீரியலில் இதுவரை வரவில்லையே என ரசிகர்கள் வியந்து வந்த நிலையில், இப்போது ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் என்ட்ரி ஆகிறார்.
மிகவும் புரட்சிகரமான கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பது கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய தின எபிசோடில் ஜீவானந்தம் என்ட்ரி ஆகிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu