Ethirneechal promo today ஞானத்திடம் மன்னிப்பு கேட்கும் குணசேகரன், விறுவிறுப்பாகும் எதிர்நீச்சல்

Ethirneechal promo today ஞானத்திடம் மன்னிப்பு கேட்கும் குணசேகரன், விறுவிறுப்பாகும் எதிர்நீச்சல்
X
இன்றைய எபிசோடில் தனக்கு உதவிய ஞானத்திடம் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி குணசேகரன் கெஞ்சுகிறார்.

சன்டிவியில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது எதிர் நீச்சல் சீரியல் தான். இயக்குநர் திருச்செல்வம் தற்போது கொண்டு வந்துள்ள சீரியல் பெண்களை மையமாகக் கொண்டு அவர்களின் உரிமையை நியாயமாக எடுத்துச் சொல்லியும் சில இடங்களில் போராடியும் பெற வேண்டிய நிலையை மக்களுக்கு உணர்த்துகிறது.


எதிர்நீச்சல் சீரியலில் பல எதிர்பாராத மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குணசேகரன் ஞானம் ஆதிரை திருமண விஷயத்தில் தன்னை எதிர்த்து பேசியதால் நீ எல்லாம் என்னை பேசுவதற்கு அருகதை கிடையாது. எனக்கு சமமானவன் கிடையாது என்று அசிங்கப்படுத்தி திட்டி இருந்தார். அடுத்த நாள் காலையில் ஞானம் குணசேகரன் உடன் ஒன்றாக சாப்பிடுவதற்கு டைனிங் டேபிளில் உட்காரும்போது கூட என்னோடு சரிசமமாக உட்காருவதற்கு உனக்கு அருகதை கிடையாது என்று சாப்பிடும் வேலையிலும் திட்டி அனுப்பி இருந்தார்.

இன்றைய எபிசோடில், தனக்கு உதவிய ஞானத்திடம் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி குணசேகரன் கெஞ்சுகிறார். ஜனனி, நந்தினி மற்றும் ஈஸ்வரியோடு சேர்ந்து ஆதிரைக்கு அருணை திருமணம் செய்து வைப்பதாக சத்தியம் செய்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே அருண் ஆதிரையை நான் திருமணம் செய்து காட்டுகிறேன் என்று குணசேகரன் முன்பு சவால் விட்டிருக்கும் நிலையில் மருத்துவமனையில் இருக்கும் ஆதிரையை அருண் மற்றும் அரசு இருவரும் நேரில் போய் பார்க்கின்றனர். அங்கே ஜனனி, நந்தினி, ஈஸ்வரி மூவரும் ஆதிரையை அவருக்கு பிடித்த அருனுடன் தான் நாங்கள் திருமணம் செய்து வைப்போம் இது சத்தியம் என்று சத்தியம் செய்து கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் வீட்டுக்கு வந்த குணசேகரன் அங்கே இருக்கும் ஞானத்திடம், அண்ணனை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்றா? என்ன மன்னிச்சிடு என்று ஞானத்தின் காலில் குணசேகரன் விழுந்து கதறி அழ ஆரம்பத்தில் எதற்கும் அசராத ஆளாக ஞானம் நின்று கொண்டிருக்க, பிறகு கதிர் மற்றும் குணசேகரன் இருவரும் தொடர்ந்து ஞானத்தின் மனதை மாற்றுகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்