ஏய் இந்தாம்மா..! ஸாரி இந்தாங்கம்மா! இனி ஞாயிற்றுக்கிழமையும்!
தமிழ் சீரியல் வரலாற்றிலேயே அதிக வரவேற்பை நாளுக்கு நாள் பெற்று வரும் தொடராக பதிவாகியுள்ளது எதிர்நீச்சல் தொடர். இந்த தொடரில் நடித்து வரும் அத்தனை கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு பகிர்ந்து அனைவருக்குமான காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இயக்குநர் மற்றும் கதை ஆசிரியரின் நேர்த்தியான எழுத்தும், அதை படமாக்கும் விதமும் கதையை நகர்த்திச் செல்லும் அழகும் ரசிகர்களை இந்த சீரியலுக்கு அடிமைப்படுத்திவிட்டது என்றே சொல்லலாம். கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல், வயதான தாத்தாக்கள் வரை ஆண்களுக்கே மிகவும் பிடித்த சீரியலாக இந்த தொடர் இருக்கிறது.
இந்த தொடரின் முக்கியமான கதாபாத்திரங்களான நந்தினி, ரேணுகா, ஜனனி, ஈஸ்வரி நால்வரும் இவர்களுக்கு எதிராக நிற்கும் குடும்பத் தலைவர் குணசேகரன், அவர் பேச்சுக்கு யோசிக்காமல் தலையாட்டும் ஞானசேகரன், கதிர் என இரு தம்பிகளும், அண்ணனை எதிர்த்து மனைவியோடு துணை நிற்கும் கடைசி தம்பி சக்தியும் இந்த சீரியலுக்கு மிக முக்கியமான தூண்களாக இருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து எஸ்கேஆர் குடும்பம், முக்கியமான கதாபாத்திரமான அப்பத்தா, 4 சகோதரர்களுடன் பிறந்த ஆதிரை, இவர்களின் அம்மா விசாலாட்சி, அவரின் தம்பி, ஈஸ்வரி, நந்தினி ஆகியோரின் அப்பாக்கள், ரேணுகாவின் அம்மா என கதையில் மிகவும் சிறப்பாக நடிக்கக் கூடியவர்கள் பலர்.
இவர்களையெல்லாம் தான் ஒரு சீனுக்கு வந்தாலும் அதையும் பேச வைக்கும் ஜான்சி ராணியும் அவரது மகன் கரிகாலனும் சீரியலின் தற்போதைய பரபரப்புக்கு மிக காரணமானவர்கள். கடைசியாக வந்தாலும் அவர்தான் இந்த மொத்த கப்பலையும் தாங்கிச் செல்லும் ஜீவானந்தம். அவருக்கு உதவி செய்யும் ஜனனியின் நண்பனான கௌதம் என இந்த சீரியலில் வரும் அனைத்து கதாபாத்திரமும் மனதில் பச்சென்று ஒட்டிக் கொண்டதுதான் இந்த தொடரின் வெற்றி.
வாடி வாசல் தாண்டி என தொடங்கும் பாடலில் தொடங்கி, இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் வகையில் எதிர்பார்ப்புகளும் பரபரப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. வடிவேலு ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் ஒரு திரைப்படத்தில் 3 பெண்கள் பரிதவித்து, ஆட்டோவை லாரிக்குள்ளலாம் உட்டு ஓட்டியாந்தேன் என்று சொல்வதைப் போல இரவு 9.30 மணிக்கு டான்னு வீட்டு டிவி முன்னாடி ஆஜர் ஆகிடறாங்க மக்கள்.
இனி ஞாயிற்றுக்கிழமையும் வீட்ல தோசை லேட்டுதான்.. பரவால நேரம் போறதே தெரியாது நாமளும் சேர்ந்தே அந்த சீரியல பாத்து ரசிப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu