இளையராஜாவுக்கு 80வது பிறந்தநாள் - திருக்கடையூரில் இன்று சதாபிஷேகம்

இளையராஜாவுக்கு 80வது பிறந்தநாள் - திருக்கடையூரில் இன்று சதாபிஷேகம்
X

கோவில் நிர்வாகம் சார்பாக இளையராஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இசைஞானி இளையராஜா, தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சதாபிஷேக விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில், ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்த கடேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, 60, 70, 75, 80, 90, 100 வயதை எட்டுபவர்கள், முறையே சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து வழிபடுவது வழக்கம்.

அவ்வகையில், இசையமைப்பாளர் இளையராஜா, இன்று தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு, திருக்கடையூர் கோவிலில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் யாகசாலை பூஜை நடத்தினார். ஆயுள் விருத்தி வேண்டி 84 கலசங்கள் வைக்கப்பட்டு ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இதில், இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, கோவில் நிர்வாகம் சார்பில் இளையராஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!