Dunki Thirai Vimarsanam டங்கி படம் எப்படி இருக்கு?

Dunki Thirai Vimarsanam டங்கி படம் எப்படி இருக்கு?
X
டங்கி திரைவிமர்சனம், ரேட்டிங், ரிவியூ படம் எப்படி இருக்கு உள்ளிட்ட விவரங்களைக் காண்போம்

Dunki Review Tamil | Dunki Padam Eppadi Irukku | Shah Rukh Khan starring Dunki Tamil Movie Review in Tamil | Dunki Movie Review in Tamil | Dunki released theatres in Chennai| Dunki released theatres in Coimbatore| Dunki released theatres in Tirunelveli| Dunki released theatres in Madurai| Dunki released theatres in Trichy

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கி கடந்த டிசம்பர் 21 ம் தேதி வெளிவந்த Dunki Review in Tamil டங்கி படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. டங்கி திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Dunki Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். ரெட் சில்லி எண்டர்டெய்ண்மெண்ட்ஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுசல், பொம்மன் இரானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ப்ரீத்தம் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Dunki Review in Tamil

Dunki Trailer

டங்கி ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Dunki OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : டங்கி (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : டிசம்பர் 21

இயக்குநர் : ராஜ்குமார் ஹிரானி

தயாரிப்பாளர் : கௌரி கான், ராஜ்குமார் ஹிரானி, ஜோதி தேஸ்பாண்டே,

திரைக்கதை : ராஜ்குமார் ஹிரானி

கதை : ராஜ்குமார் ஹிரானி

நடிப்பு : ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுசல், பொம்மன் இரானி

இசை : ப்ரீத்தம்

ஒளிப்பதிவு : சி கே முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய், குமார் பங்கஜ்

எடிட்டிங் :ராஜ்குமார் ஹிரானி

தயாரிப்பு நிறுவனம் : ரெட் சில்லி எண்டர்டெய்ண்மெண்ட்ஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ்

-

டங்கி படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Dunki Padam Eppadi Irukku ? Twitter Review

டங்கி படம் எப்படி இருக்கு? | Dunki Padam Eppadi Irukku ?

லண்டன் செல்லவேண்டும் என்று நினைக்கும் மனு, சுக்கி, புக்கு, பாலி ஆகியோரின் கதைதான் இது. இதில் ஹார்டியாக வந்து அத்தனை பேர் நடிப்பையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார் ஷாருக்.

ஒரு ராணுவ வீரராக வரும் ஷாருக், தன்னை நம்பி வந்த தன் நாட்டு இளைஞர்களுக்காக உயிரைக் கூட பணயம் வைத்து செய்யும் சில காரியங்களால் அனைவரது மனதிலும் நிற்கிறார். தனது இயல்பான நடிப்பால் மக்களையும் கவர்ந்துவிடுகிறார்.

எமோஷனல் காட்சிகள் மட்டுமின்றி, சிரிப்பு வரவழைக்கும் பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன. அதிலும் சில இடங்களில் தரை மட்டம் வரைக்கும் இறங்கி அலசியிருக்கிறார் ஷாருக். நீதிமன்ற காட்சியில் அவரது நடிப்பு நம்மை அறியாமலேயே அசர வைக்கிறது.

ஷாருக்கானுக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தி டாப்ஸியும் இந்த படத்தின் கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளார். மனு எனும் பெண்ணாக நடித்துள்ள டாப்ஸி, இழந்த தனது சொந்த வீட்டை மீட்க லண்டனுக்கு செல்கிறார். அங்கு அவர் படும் கஷ்டம் உணர்வுப்பூர்வமானதாக இருக்கிறது. இவர்கள் ஐவரைத் தவிர, ஆங்கில ஆசிரியராக வரும் பொமன் இரானியும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.

பின்னணி இசையும் பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன. எடிட்டிங் பணியை தானே கவனித்துள்ளதாக ராஜ்குமார் ஹிரானி தனக்கு தேவையானவற்றை சிறப்பாக எடிட் செய்துள்ளார். வசனங்களும் எதார்த்த காட்சிகளும் நம்மை நிமிர்ந்து அமர்ந்து படம் பார்க்கச் செய்கிறது.

நிலம் தான் இந்த படத்தின் மையக் கரு. பறவைகள் உணவுக்காக வேறேதோ தேசம் சென்றாலும், சொந்த தேசத்துக்கு உரிமையுடன் வருகின்றன. வேலைக்காக வெளியூர் செல்லும் ஒருவனுக்கு சொந்த ஊரில் நிலம் எனும் எல்லை போட்டு குறிப்பிட்ட இடம் அவனுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். பணம் இல்லாதவனுக்கு என்ன கிடைக்கும்? என்கிற ஒரு கம்யூனிச சித்தாந்தத்தின் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

-

டங்கி கதைச் சுருக்கம் | Dunki Story Explained

மனு, சுக்கி, புக்கு, பாலி ஆகிய நான்கு பேரும் லண்டனுக்கு சென்று தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி, நல்ல வாழ்வு வாழலாம் என திட்டமிடுகின்றனர். அவர்களின் வாழ்க்கையில் புதிதாக நுழையும் ஒரு கதாபாத்திரம்தான் ஷாருக்கானின் ஹார்டி கதாபாத்திரம்.

தங்களது வாழ்க்கை மேம்பட அவர்கள் ஏஜெண்டிடம் பேரம் பேசி, சட்டவிரோதமாக நாடுகள் பல கடக்கிறார்கள் என்பதே படத்தின் ஒன்லைன். சட்டவிரோதமாக நாடுகளைக் கடக்கும் இந்த குழுவுக்கு ஏற்படும் ஆபத்துகளும், சிரமங்களும் அவர்களை என்ன செய்தது அதிலிருந்து முன்னோக்கி பயணித்தார்களா லண்டன் சென்றடைந்தார்களா என்பது முதல் பாதியில் பெரிதும் எதிர்பார்க்கும் வகையில் அமைக்கப்பட்ட கதை.

பிற்பாதியில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னை, அதை எப்படி அவர்கள் கையாண்டார்கள் என்பதும் ஒரு நல்ல மெசேஜுடன் படத்தை முடித்தும் திருப்தியான ஒரு படமாக அமைந்தது.

-

டங்கி ஓடிடி ரிலீஸ் தேதி Dunki OTT Release Date

திரைப்படம் கடந்த டிசம்பர் 21 தேதி வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 26 ம் தேதி ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : டிசம்பர் 21

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : ஜியோ சினிமாஸ் |Jio Cinemas

ஓடிடி ரிலீஸ் தேதி : ஜனவரி 26

-

டங்கி OTT: FAQ

டங்கி ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Dunki out?

ஆம். டங்கி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

டங்கி படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Dunki hit or flop?

டங்கி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

டங்கி படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Dunki ?

ராஜ்குமார் ஹிரானி டங்கி திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags

Next Story
பவானி காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு..!