'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர் மணிரத்னம்

இந்தி தெரியாது போடா..! - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர் மணிரத்னம்
X
மணிரத்னம்தான் 'இந்தி தெரியாது போடா' என்பதை முதலில் தொடங்கிவைத்தவர் என்று கமல் பேசிய பழைய வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.

தமிழ் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே 'இந்தி தெரியாது போடா' என்ற கேப்ஷன் ட்ரெண்டிங்கில் உள்ளது. அவ்வப்போது இந்த பஞ்ச்சை வைரலாக்கி வரும் தமிழ்நாட்டு இளைஞர்கள், அதனை டீ ஷர்ட்டில் பிரிண்ட் செய்தும் ட்ரெண்ட் செய்தனர். இந்தநிலையில், மணிரத்னத்துக்கு இந்தி தெரியாது போடா என கமல் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக, இந்தப் படத்துக்கு புரமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் கொச்சி, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி நகரங்களுக்கு சென்றிருந்தனர். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நந்தினி கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மணிரத்னத்துக்கு தரமான சம்பவம் ஒன்று நடந்தது. அப்போது கமல் ஏற்கெனவே மணிரத்னம் பற்றி பேசியிருந்த ஒரு உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது கடந்த சில மாதங்கள் முன்னர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த கமல், ''மணிரத்னம் இந்தி பேசமாட்டார், இந்தி தெரியாது, ஆனா மும்பையில்தான் படிச்சார், அது ஒரு வீம்பு. அவருதான் முதன்முதலில் இந்தி தெரியாது போடா-வைத் தொடங்கி வச்சதுன்னு நினைக்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், 'பொன்னியின் செல்வன்' புரமோஷன் நிகழ்ச்சிக்காக மும்பை சென்றிருந்த மணிரத்னத்திடம், அங்கிருந்த செய்தியாளர் இந்தியில் சில கேள்விகள் கேட்டார். அதனை ரொம்பவே உன்னிப்பாக கவனித்த மணிரத்னம், இறுதியாக எதுவுமே புரியாமல் அங்குமிங்கும் பார்க்கிறார். அதோடு பக்கத்துல இருந்த ஐஸ்வர்யா ராயிடம், 'What did he say', அவரு என்ன சொல்றார்ன்னு வெள்ளந்தியாக விளக்கம் கேட்கிறார். கமல் பேசியதையும், அதன்பிறகு, தற்போது மணிரத்னம் இந்தி தெரியாமல் முழிப்பதும் ஒரே வீடியோவாக வெளியாகி இப்போது வைரலாகி வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!