எல்லா இடத்திலும் வராதே.. ரசிகருக்கு ரஜினி அட்வைஸ்

எல்லா இடத்திலும் வராதே.. ரசிகருக்கு ரஜினி அட்வைஸ்
X

சென்னை விமான நிலையத்தில் ரசிகருக்கு அறிவுரை வழங்கிய ரஜினிகாந்த்.

சென்னை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவருக்கு அறிவுரை வழங்கியது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தாயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த ரஜினிகாந்த், அப்படத்துக்கு பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற உள்ள நிலையில் அவற்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமான மூலம் செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார், டெல்லி சென்றபின் அங்கிருந்து மாற்று விமானத்தில் நேபாளம் செல்ல உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயிலரின் நான்காவது ஷெட்யூல் படப்பிடிப்பிற்காக அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு புறப்படும்போது ரசிகர் ஒருவரிடம் தன்னை எல்லா இடங்களிலும் பின்தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தி, வேலையில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறினார்.

இதைத் தொடர்ந்து, ரசிகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார், அதில், நடிகர் ரஜினிகாந்த் தன்னை எல்லா இடங்களிலும் வர வேண்டாம், வேலைதான் முக்கியம் என்பதால் வேலையில் கவனம் செலுத்துங்கள் என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது, மேலும் நடிகர் இந்த ரசிகரை கேலி செய்ததாக தவறாகக் கருதப்பட்டது.

நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் டெல்லி வழியாக நேபாளம் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி