'தல' என்று அழைக்க வேண்டாம் : நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்

தல என்று அழைக்க வேண்டாம் : நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்
X
வருங்காலங்களில் தம்மை, 'தல' என்று அழைக்க வேண்டாம் என்று, நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ, என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. வருங்காலங்களில் என்னை தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

திரைப்பட நடிகர்களில் நடிகர் அஜித் சற்று வித்தியாசமானவர். தனக்கென ரசிகர் மன்றங்கள் கூடாது என்று, அவற்றை கலைத்துவிட்டார்; அவருக்கான அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கமும் இல்லை. இந்த சூழலில் தல என்று அழைக்கக்கூடாது என்று தற்போது தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!