'நெஞ்சுக்கு நீதி' குழுவினர் அப்செட்! பட்டையை கிளப்பும் 'டான்' பட வசூல்
டான் படத்தில் ஒரு காட்சி.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பப்படும் நடிகராக, சிவகார்த்திகேயன் உள்ளார். இதனால், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிவிட்டார். அண்மையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம் 'டான்'.
இப்படத்தை, அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். படத்தில், பிரியங்கா மோகன் நாயகியாகவும், எஸ்ஜே சூர்யா, ராதாரவி. சூரி பால சரவணன், முனிஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனத்துடன சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து, இப்படத்தை தயாரித்துள்ளன. அனிருத் இசையில் பாடல்கள் பலரையும் ஈர்த்துள்ளன. கடந்த வாரம் வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகளவில் பெரிய வசூலையும் வாரி வழங்கி வருகிறது. டான் படம் வெளியாகிய 9 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 66 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக, கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், 'நெஞ்சுக்கு நீதி' படம் வெளியாகி உள்ளது. இப்படத்தை பார்க்க, மாநாட்டுக்கு கூட்டத்தை திரட்டுவது போல, தியேட்டர்களுக்கு ஆளுங்கட்சியினர் பலரையும் அழைத்து வந்து அரங்கம் நிறைந்திருப்பது போல் காட்டி வருகின்றனர்.
இப்படம் வெளி வந்த போதும், டான் படத்தின் வசூல் எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை. உலகளவில் ரூ. 70 கோடியை வசூலித்துள்ளதால், 'நெஞ்சுக்கு நீதி' படக்குழுவினர் சற்று கலக்கத்தில் இருப்பதாகவும் பேசப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu