பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே நுழைய லட்சக்கணக்கில் செலவா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே நுழைய லட்சக்கணக்கில் செலவா?
X

பிக்பாஸ் போட்டியாளர் ராம்.

bigg boss ram - பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்க ராம் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

bigg boss ram - அரசியல் கட்சித் தலைவரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ரியாலிட்டி கேம் ஷோ பிக் பாஸ் தமிழ். பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் வாராந்திர எலிமினேஷனுடன் 20 க்கும் மேற்பட்ட பிரபல போட்டியாளர்கள் வீட்டிற்குள் பூட்டப்பட்டிருப்பதை இந்த நிகழ்ச்சியில் காண்பார்கள். அதிக வாக்குகளைப் பெற்று 100வது நாள் வரை தாக்குப்பிடித்து உள்ளவரேவெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதுவரை, மாடலும் நடிகருமான ஆரவ், "மெட்ராஸ்" புகழ் ரித்விகா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த பாடகர் முகேன், நடிகர் ஆரி, டிவி நட்சத்திரம் ராஜு ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்றுள்ளனர்.

பிக் பாஸ் வீடு ஈவிபி பிலிம் சிட்டி பூந்தமல்லியில் அமைந்துள்ளது. வீட்டில் ஒரு தோட்டம், குளம், செயல்பாட்டு பகுதி மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை அடங்கும். இது இரண்டு பெரிய படுக்கையறைகள், ஒரு வாழும் பகுதி, ஒரு சமையலறை, ஒரு ஸ்டோர்ரூம், ஒரு புகைபிடிக்கும் அறை, ஒரு சிறை மற்றும் நான்கு குளியலறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹவுஸ்மேட்ஸ் மற்றும் பிக்பாஸ் இடையேயான அனைத்து தனிப்பட்ட உரையாடல்களும் நிகழும் கன்ஃபெஷன் ரூம் என்ற பெயரில் ஒரு அறை உள்ளது. வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம் மற்றும் கடிகாரங்கள் ஆகியவைகள் இங்கு கிடையாது. இன்னும் சொல்லப்போனால் வெளியுலகத் தொடர்பே கிடையாது. தொகுப்பாளர் கமலஹான், பிக்பாஸ் இவர்கள் இருவர் மட்டுமே அவர்களிடம் தொடர்புகொள்வர்.

பிக்பாஸ் 6வது சீசனின் போட்டியாளர்கள் பட்டியலில் ஜி.பி.முத்து, அசல் கோலார், முகமது அசீம், ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், ஷெரீனா சாம், மணிகண்டன் ராஜேஷ், ரசிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, தினேஷ் கனகரத்தினம், ஜனனி குணசீலன், சாந்தி அரவிந்த், விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி, மகேஸ்வரி, விஜே கதிர், குயின்சி ஸ்டான்லி, நிவாஷினி, ஷிவின் கணேசன் மற்றும் தனலட்சுமி. குறைந்த வாக்குகள் பெற்றதால் சாந்தி வெளியேற்றப்பட்டதால், ஜி.பி.முத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து சாந்தியும், அசல் கோளாறும் வெளியேறியுள்ளனர்.

bigg boss tamil season 6

இந்த நிலையில், நிகழ்ச்சியின் போட்டியாளர் ராம் தன்னை விளம்பரப்படுத்த பணம் செலவழித்ததை ஒப்புக்கொண்ட வீடியோ, நிகழ்ச்சியைப் பின்தொடர்பவர்கள் மத்தியில் பரவி வருகிறது.

இந்த சீசனில் அதிகம் அறியப்படாத பல முகங்கள் போட்டியாளர்களாக வந்திருக்கிறார்கள். அவர்கள் இதற்காக பல லட்சம் செலவு செய்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

பிக் பாஸ் வருவதால் ராம் ராமசாமி ரூ.10 லட்சம் வரை செலவு செய்தார் என மற்ற போட்டியாளர்கள் கூற அவர் அவ்வளவு எல்லாம் இல்லை என கூறுகிறார். பின்னர் அவர், 5 லட்சம் ரூபாயை விட குறைவாக ரூ.2.5 லட்சம் செலவழித்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!