செம்பருத்தி டீ யால் ரத்த அழுத்தம் குறையுமா? சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா
செம்பருத்தி டீ யுடன் நடிகை நயன்தாரா.
நடிகை நயன்தாரா அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அவர் புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதுதான் செம்பருத்தி டீ விவகாரம். நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் செம்பருத்தி டீ தினமும் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் குறையும், உடலில் தேவையற்ற கொழுப்பு குறையும், இதயத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் மாரடைப்பு வராது என ஒரு பதிவினை குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள தனது ஆலோசகரான மருத்துவரது வலைதள பக்கத்தை பார்க்கும் படியும் கூறியுள்ளார். நடிகை நயன்தாராவின் இந்த பதிவிற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் ஆதரவு கிளம்பி உள்ளது. குறிப்பாக நயன்தாராவின் பாலோயர்களாக சுமார் 87 லட்சம் பேர் உலகம் முழுவதும் உள்ளனர். அவர்கள் நயன்தாராவிற்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் மருத்துவர் ஒருவர் நயன்தாராவின் இந்த பதிவிற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். விஞ்ஞான ரீதியாக செம்பருத்தி டீ ரத்த அழுத்தத்தை குறைக்காது என அவர் குறிப்பிட்டு இருந்தார். இதே போல் மேலும் பலரும் நயன்தாராவின் செம்பருத்தி டீ விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எந்த அடிப்படையில் இவர் இப்படி பதிவிட்டார் என தங்களது கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.
இது ஒரு புறம் இருக்க செம்பருத்தி டீ பிரச்சினையில் எதிர் கருத்துக்கள் தெரிவித்தவர்களை முட்டாள்கள் என கடுமையாக வர்ணித்தார் நடிகை நயன்தாரா. மேலும் முதல் பதிவினை நீக்கிவிட்டு புதிதாக செம்பருத்தி டீ பற்றி மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். செம்பருத்தி டீ விவகாரம் நடிகை நயன்தாராவிற்கு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக தற்போது சமூக வலைத்தளங்களில் உடல் ஆரோக்கியம் தொடர்பான குறிப்புகள் என்ற பெயரில் தங்கள் இஷ்டத்திற்கு பதிவுகள் போடுவது அதிகரித்து வருகிறது. இதை பார்த்து சிலர் அப்படியே பின்பற்றுவதால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ஆதலால் மருத்துவ குறிப்புகளை வெளியிடும்போது சமூக வலைத்தளங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu