ரூ.100 கோடியை வசூலித்த 'டாக்டர்' - உற்சாகமான படக்குழு

ரூ.100 கோடியை வசூலித்த டாக்டர் - உற்சாகமான படக்குழு
X

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் .

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம், ரூ.100 கோடி வசூலை கடந்திருப்பதாக, படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம், 'டாக்டர்'. இதில், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த அக். 9-ஆம் தேதி நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

காமெடி கலந்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கேரள மாநிலங்களிலும் 'டாக்டர்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டர்களிலும் வசூல் குறையாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை கடந்துள்ளது. இது தொடர்பாக, படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "இந்த வேற மாறி பிளாக்பஸ்டர் . படத்தின் 25 நாட்களும் உங்களைச் சிரிக்க, கைதட்ட, உற்சாகப்படுத்த வைத்துள்ளது. 'டாக்டர்' திரைப்படம் திரையரங்குகளின் மொத்த வசூல் 100 கோடி ரூபாயைக் கடந்திருப்பதை நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இது உங்களுக்கும் எங்களுக்குமான வெற்றி" என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!