சூர்யாவுடன் படத்தில் நடிக்க ஆசையா? அப்போ உங்களுக்குத் தான் இந்த நியூஸ்

சூர்யா இப்போது 'சிறுத்தை' சிவாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா 42 படம் 3டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஹிந்தி ரைட்ஸ் நூறு கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க ஆட்கள் தேவை என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கதில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் என்னென்ன தகுதி வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளது. அதில், 25 முதல் 55 வயது வரை உள்ள ஆண்களாக இருக்க வேண்டும். கட்டுப்கோப்பான உடலமைப்பு, நீளமான தலைமுடி, அடர்த்தியான தாடி மீசையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட தகுதியுடைய ஆண்கள் resumesivateam@aol.com என்ற இணைய முகவரியில் தங்களின் முழுவிவரத்தை அனுப்பவும், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இதில் உடன் வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu