நடிகை சாய்பல்லவி யாருடன் நடிக்க மாட்டேன் என சபதம் செய்தார் தெரியுமா?
![நடிகை சாய்பல்லவி யாருடன் நடிக்க மாட்டேன் என சபதம் செய்தார் தெரியுமா? நடிகை சாய்பல்லவி யாருடன் நடிக்க மாட்டேன் என சபதம் செய்தார் தெரியுமா?](https://www.nativenews.in/h-upload/2022/08/22/1580616-sai.webp)
நடிகை சாய் பல்லவி.
Sai Pallavi Latest News -தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். என்னதான் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் சாய் பல்லவி நடித்து வந்தாலும் தெலுங்கு திரை உலகில் தான் அவருக்கு நிலையான ஒரு இடம் இருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் சாய் பல்லவி நடித்திருக்கிறார். ஆனால் ஒரே ஒரு நடிகருடன் மட்டும் இதுவரை அவர் நடிக்கவில்லை என்பது மட்டுமல்ல. அவருடன் எந்த சூழலிலும் நான் இணைந்து நடிக்க மாட்டேன் என்று சபதமும் செய்திருக்கிறார். அந்த நடிகர் யார் என்பதை அறிய கீழே படித்தால் தெரியும்.
latest news about Sai Pallavi, Vijaydevarakonda
அவர் வேறு யாரும் அல்ல. தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் விஜய் தேவர கொண்டா தான். இதற்கு சாய் பல்லவி கூறும் காரணம் நான் குடும்ப பாங்கான கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன். அது மட்டுமல்ல பெண்களை முன்னிறுத்தி அமையும் கதைகளிலும் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இந்த காரணம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் அவர் வெளிப்படையாக கூறி இருப்பது இதுதான்.
சாய்பல்லவி தெரிவித்த இந்த கருத்துக்கள் தற்போது தெலுங்கு திரை உலகில் மட்டுமல்ல தமிழ் திரை உலகிலும் வைரலாக பரவி வருவதோடு தெலுங்கு திரை உலகில் விஜய் தேவரகொண்டா ரசிகர்களை சாய்பல்லவி மீது கோபத்தை தூண்ட வைத்து இருக்கிறது என்பதும் உண்மை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu