உதயநிதியின் 'கலகத்தலைவன்' படம் எப்படி இருக்கு தெரியுமா?

உதயநிதியின் கலகத்தலைவன் படம் எப்படி இருக்கு தெரியுமா?
X
மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்துள்ள 'கலகத் தலைவன்' படம் எப்படி இருக்கு என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் இன்று(18/11/2022) வெள்ளித் திரையில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'கலகத்தலைவன்'. இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் ஆரவ் வில்லன் கதாபாத்தித்தில் மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் பின்னணியில் இருந்தாலும் தொடக்கத்தில், முழு அரசியலில் ஈடுபடாமல் இருந்தார் உதயநிதி. ஆனால், திரைத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திரைப்படத் தயாரிப்பு மற்றும் நடிப்பு என தனது பயணத்தைத் தொடர்ந்தார். இந்தநிலையில், தீவிர அரசியலில் ஈடுபட்ட உதயநிதி தி.மு.க இளைஞர் அணியின் மாநிலச் செயலாளர் ஆனார். அதனைத் தொடர்ந்து கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.

உதயநிதி, சட்டமன்ற உறுப்பினராக ஆன பிறகு வெளியானத் திரைப்படம்தான் 'நெஞ்சுக்கு நீதி'. கலைஞரின் புத்தகத்தின் பெயரிலேயே இத்திரைப்படம் உருவானதால் படத்துக்கு உதயநிதி ரசிகர்களிடையேயும் தி.மு.க.,வினரிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படம் வெளியானபின்பு நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்தப் படம் சாதிய வேறுபாடு மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை குறித்த கதைக்களத்தை கொண்டிருந்தது. திரையரங்கில் வெளியானத் இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தை முடித்த கையோடு, 'கலகத் தலைவன்' படத்தில் உதயநிதி நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் முன்பதிவு இரண்டு தினங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்படத்தில் உதயநிதி ஒரு சாதாரண மனிதராக இருந்து, ஒரு முக்கியக் காரணத்திற்காக போராளியாக மாறுகிறார். படத்தில் அவருக்கு, தீவிரமான அதிரடி காட்சிகளும் உள்ளன.

இத்திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் மகிழ் திருமேனி ஏற்கெனவே, 'தடையறத் தாக்க', 'மீகாமன்', 'தடம்' ஆகிய திரைப் படங்களை இயக்கி உள்ளார். இதில், 2019ல் வெளிவந்த 'தடம்' படம் வெற்றிப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, உதயநிதியுடன் இயக்குநர் மகிழ்திருமேனி முதன்முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'கலகத் தலைவன்' படத்தில் உதயநிதியின் நடிப்புக்கு பெரிய ஸ்பேஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இத்திரைப்படத்தை பல்வேறு திருப்பங்களுடன் கன கச்சிதமாக உருவாக்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், இதுவரை கதாநாயகனாகவும், துணை வேடங்களிலும் நடித்து வந்தார். அவர் 'கலகத் தலைவன்' படத்தின் மூலம் வில்லனாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரெய்லரிலேயே ஆக்‌ஷன் காட்சிகளில் ஆரவின் நடிப்பு மிரட்டலாக இருந்ததைப் பார்த்து, அப்போதே, இத்திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ஆரவிற்கு நல்ல எதிர்காலம் தொடக்கம் என்று கோலிவுட் வட்டாரம் குறி சொல்லியிருக்கிறது அதேபோல, நிதி அகர்வால் இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். நீண்ட நாளுக்கு பிறகு நிதி அகர்வாலை திரையில் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!