இயக்குநர் டி.ராஜேந்தர் நலமாக இருக்கிறார்: நடிகர் நெப்போலியன்..!
நடிகர் நெப்போலியன்.
Napoleon Tamil Actor- நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.ராஜேந்தரை மேலதிக பரிசோதனைக்காக அவரது குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றனர். முக்கியமான அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், டி.ராஜேந்தர் அவர்களின் உடல்நிலை தேறி வருவதாக தகவல்கள் வெளிவந்தன. தொடர்ந்து தனது மகனும் நடிகருமான சிலம்பரசன் டி.ராஜேந்தர் இருக்கும் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி டி.ராஜேந்தர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்தநிலையில், தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற பிரபல நடிகர்களான நெப்போலியன் மற்றும் ஆர்.பாண்டியராஜன் ஆகியோர் டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். இவர்களின் இந்த சந்திப்பின்போது பூரண குணமடைந்து வரும் டி.ராஜேந்தர் இந்த சந்திப்பு குறித்து அவருக்கே உரித்தான ஸ்டைலில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் நெப்போலியன் குறிப்பிட்டு இருப்பதாவது ..,
நண்பர்களே , தமிழ்ச்சொந்தங்களே,
FeTNA 2022 நிகழ்ச்சிக்காக நான் 4 நாட்கள் New York நகருக்குச் சென்றிருந்தேன்..!
அங்கு மரியாதைக்குறிய அண்ணன் T Rajendar அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிலிருந்து வந்திருந்தார்..! நாங்கள் அந்த தகவல் கிடைத்ததும் நானும், எனது நண்பர் பாண்டியராஜனும் அவரை சந்திக்க நேரில் சென்றோம்..! அந்தத் தருணம் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் ..! TR அவர்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம்..!" என்று இன்ஸ்டா வீடியோ பதிவில் பதிவிட்டிருந்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu