'டேஞ்சரஸ் உமன்'திரைப்படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு

டேஞ்சரஸ் உமன்திரைப்படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு
X
ராம் கோபால் வர்மா டேஞ்சரஸ் உமன் என்ற புதிய படம் டைரக்ட் செஞ்சிருக்கார் படத்தில் இரு அழகிகள் லெஸ்பியனாக நடித்துள்ளனர்

'டேஞ்சரஸ் உமன்'(தமிழில் - காதல் காதல்தான்) திரைப்படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு

இந்திய சினிமாவில் யூகிக்க முடியாத அளவிற்கு திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை அதிர வைத்தவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கிய சத்யா, சர்க்கார், சர்க்கார் ராஜ், கம்பெனி உள்ளிட்ட திரைப்படங்கள் இந்திய சினிமாவையே மிரட்டின. அந்த அளவிற்கு ரத்தம் தெறிக்க அவரின் திரைப்படங்கள் இருக்கும்.

ராம் கோபால் வர்மா. இதற்கு முன்னதாக சர்ச்சையை கிளப்பும் காட் செக்ஸ் ட்ரூத், கிளைமேக்ஸ், நேக்கட் என ஏகப்பட்ட படங்களை இயக்கி இருந்தார். அந்த படங்களில் அதிக அளவிலான ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதை விட எல்லை மீறிய ஆபாச காட்சிகள் கொண்ட 'டேஞ்சரஸ் உமன்'(தமிழில் - காதல் காதல்தான்) திரைப்படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிச்ச நிலையில் ரிலீஸ் பண்ணறது தள்ளி வைச்சிட்டதா அறிவிச்சிருக்கார்

இந்திய சினிமாவில் யூகிக்க முடியாத அளவிற்கு திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை அதிர வைத்தவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கிய சத்யா, சர்க்கார், சர்க்கார் ராஜ், கம்பெனி உள்ளிட்ட திரைப்படங்கள் இந்திய சினிமாவையே மிரட்டின. அந்த அளவிற்கு ரத்தம் தெறிக்க அவரின் திரைப்படங்கள் இருக்கும்.

அந்த வரிசையில் 'டேஞ்சரஸ் உமன்' என்ற புதிய படம் ஒன்றை டைரக்ட் செஞ்சிருக்கார். இந்த படத்தில் நைனா கங்குலி மற்றும் அப்ஸரா ராணி என்ற இரு அழகிகள் லெஸ்பியனாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுச்சு

மூன்று மொழிகளில் தயாரான இப்படத்திற்காக கடந்த சில நாட்களாக சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் க்ரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தை மூன்று மொழிகளில் உள்ள திரையங்க உரிமையாளர்கள் வெளியிட மறுப்பு தெரிவிச்சுப்புட்டாய்ங்க.

இதனால் படத்தின் ரிலீசை தள்ளி வைப்பதாக கோபமாக அறிவிச்சிருக்கார் ராம் கோபால் வர்மா.

Tags

Next Story
ai healthcare products