பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் புதிய கார் : என்ன விலை தெரியுமா?

பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் புதிய கார் : என்ன விலை தெரியுமா?
X
டைரக்டர் ராஜமௌலி விலை உயர்ந்த 52 லட்சம் மதிப்புடைய Volvo XC40 SUV காரை வாங்கி இருப்பதாக வால்வோ நிறுவனம் அறிவித்துள்ளது.

டைரக்டர் ராஜமௌலி விலை உயர்ந்த 52 லட்சம் ரூபாய் மதிப்புடைய, புது Volvo XC40 SUV காரை வாங்கி இருப்பதாக வால்வோ நிறுவனமே அறிவிச்சு இருக்கிறது. இதையடுத்து, ரசிகர்கள் பலரும் ராஜமௌலிக்கு வாழ்த்துக்களை தெரிவிச்சு வாராய்ங்க.


இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம் வரும் எஸ்.எஸ். ராஜமௌலி. இவரது படத்தில் பிரமாண்டத்திற்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. இதுவரை 9 படங்கள் இயக்கிய ராஜமௌலி சமந்தா நடித்துள்ள ''ஈ'' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார்.

சிம்ஹாத்ரிக்கு, திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான, எஸ்.எஸ். ராஜமௌலி அடுத்தடுத்து ஷை, சத்ரபதி, விக்ரமாகுடு, எமதொங்கா, மகதீரா, ரமணா உள்ளிய படங்களை இயக்கியுள்ளார். இருப்பினும், இவரை பான் இந்தியா இயக்குனராக வலம் வர வைத்தது. இவரது இயக்கத்தில், உருவான பாகுபலி, மாவீரம் திரைப்படங்கள் ஆகும். அதிக பொருட் செலவில் கிராஃபிக் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்று, மக்கள் பெரிதும் கொண்டாடும் படமான அமைந்தது.

இதையடுத்து, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான ஆர்ஆர்ஆர் படம் நல்ல வசூல் சாதனை படைத்து வருகின்றன.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் தற்போது உலக அளவில் 1100 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது. அடுத்து வரும் படங்களுக்கு மிகப்பெரிய இலக்கை இந்த படம் நிர்ணயித்து இருக்கிறது. மேலும், இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது ராஜமௌலி வெற்றிக்கு பிறகு விலை உயர்ந்தசொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அவர் 52 லட்சம் ரூபாய் மதிப்புடைய, புது Volvo XC40 SUV காரை வாங்கி இருப்பதாக வால்வோ நிறுவனமே அறிவித்து இருக்கிறது. இதையடுத்து, ரசிகர்கள் பலரும் ராஜமௌலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்