இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி

இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி
X

இயக்குனர் மணிரத்னம் (பைல் படம்)

பிரபல இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், முன்னணி திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு லேசான அறிகுறி இருந்ததை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாயகன், ரோஜா, ஓகே கண்மணி, குரு, இருவர், தளபதி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் மணிரத்னம். தற்போது தமிழின் முக்கியமான நாவலான கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ளார். தனிக்கென தனி ஸ்டைலுடன் திரைப்படங்களை இயக்கும் திறன் கொண்டவர் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, சரத்குமார், நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மிக பிரமாண்டமாக செட்கள் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!