அரிதாரம் அற்ற அரிதான திரைக் கலைஞர்களில் கலை நேர்த்தி கொண்டவர் நாசர்

அரிதாரம் அற்ற அரிதான திரைக் கலைஞர்களில் தனித்துவமும் கலை நேர்த்தியும் கொண்டவர் நாசர். 400 படங்களைக் கடந்துவிட்ட நாசர், இரண்டாம் முறையாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகத் தேர்வு பெற்று தமிழ் சினிமா கலைஞர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார். தன்னுடைய திரைப் பயணத்தின் ஆரம்பகாலத்திலேயே இயக்குநர் இமயத்தை, கவனிக்க வைத்தவர், .
இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் எத்தனையோ பேரை அறிமுகம் செய்திருந்தாலும் அத்தனை பேரும் சினிமாவில் வெற்றி பெற முடிந்ததில்லை. அவர் செய்த அறிமுகங்களில் முத்தான , அவர் பெருமைப்பட்ட மற்றதோர் அறிமுகம் நடிகர் நாசர் ஆவார்.
அவரின் திறமை மீது அபார நம்பிக்கை வைத்தவர் அவர் பெயரை சினிமாவுக்காக மாற்றாமல் தன் கல்யாண அகதிகள் படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் இவரை நாசர் முகம்மது[அறிமுகம்] என்றே அறிமுகம் செய்திருப்பதைப் பாருங்கள்.
முன்னதாக நாசர் தன் நாடக அனுபவத்தை வைத்து திரையுலகில் கால் பதிக்க முயன்றார்.சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பும் படித்தார்,வருமானத்துக்காக தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் ரிசப்ஷன் பகுதியில் பணியாற்றியுமிருக்கிறார். சினிமாவுக்கு முயன்ற அதே நேரம் கதை, கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பியுமுள்ளார். அவற்றில் சில பிரசுரமாகியிருக்கிறது.
பின்னர் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று நடிப்புத்துறையில் பட்டம் பெற்றார். இதன் முன்னர், தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் நடிப்புப் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார்.அவரின் திறமையைக் கண்ட பாலச்சந்தர் தன் 1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தில் குடிப்பழக்கத்தால் மனைவியை [ஒய்.விஜயா] தன் நண்பனுக்கே கூட்டிகொடுக்கும் ஒரு இழிபிறவி கதாபாத்திரத்தில் இவரை அறிமுகம் செய்தார்.
அதன் பின்னர் நாசர் நடிப்பில் தொட்ட உயரங்கள் நாம் அறிவோம். இன்று தன்னுடைய 37ஆம் ஆண்டு கோலிவுட் கொண்டாட்டத்தை ஆன்லைன் மூலம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.. ஆனால் இது தப்பான கணக்காம்.. முன்பு
இவரிடம் ஒரு முறை பேசும் போது, "மௌனப்படங்களின் காலகட்டத்தில் தமிழில் ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன். ஆனால் அதில் இப்போது வெறும் 16 படங்கள் தான் மிஞ்சியிருக்கின்றன என்பது துயரமான விஷயம்" என்று வருந்தினார்
மேலும் பேசும் போது 'என்னைப் பொறுத்தவரை சினிமா வாழ்க்கை என்பது தனி வாழ்க்கை அல்ல. சினிமா சார்ந்தவர்களின் வாழ்க்கை வேறுவிதமாக இருக்குமென பார்க்கப்படுகிறது. எங்களுடையதும் மற்ற மனிதர்களின் வாழ்க்கையைபோல தான் உள்ளது. ஆனால் அதிக மன அழுத்தம் கொண்டதாக இருக்கிறது. நாங்கள் தங்ககூண்டில் அடைக்கப்பட்ட கிளிகள்.
இந்த தமிழ்ச்சமூகத்தில் வாழ்க்கைக்கான சினிமா குறித்து மிக முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டும். டிஜிட்டல் காலத்தில் என்னைப்போன்றவர்கள் சினிமா குறித்து பேசுவது மிகவும் பயமுறுத்துகிறது. ஏனென்றால் சினிமாவின் மரபு இப்போதும் பெருமளவில் சிதைக்கப்பட்டிருக்கிறது. சினிமாவின் வீச்சை முழுவதுமாக அறிந்துகொள்ளவில்லை என்றால், இப்போது நடப்பதுபோல் சினிமாவிலிருந்து தலைவர்களை தேடும் நிலையே தொடரும்" என்றும் கூட சொன்னார்
இன்று மூத்த நடிகர் என்ற லிஸ்டிக்கு போய் விட்ட நாசர் தனது கலையை நன்கு அறிந்தவர், மேலும் அதில் தேர்ச்சி பெற்றவர். பல தசாப்தங்களாக, பல படங்களில் பலவிதமான வேடங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனது முத்திரையை பதித்தவர். பழங்காலத்திலிருந்தே பொல்லாத அரசனாக நடித்தாலும் சரி, பக்கத்து வீட்டுக்காரனாக இருந்தாலும் சரி, தன் மீது வீசப்படும் எந்த வேடத்தையும் தன்னால் செய்ய முடியும் என்பதை நாசர் நிரூபித்துள்ளார்.
ஆனால் இந்த நாசர் முதன்முதலில் கேமரா முன் நின்றது அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயிற்சிபெற்ற போதுதான். 'மிஸான் சீன' என்றொரு பயிற்சிக்காக. ஒரு காட்சிகூடத் துண்டாக்கப்படாமல் ஒரே நீளத்தில் எடுக்கப்படுவது. அதில்தான் நாசர் பிம்பம் முதன்முதலில் பதிவானது.
தொழில்முறையாய் கேமரா முன் நின்றது நாசர் குருக்களில் ஒருவரான R.S மணி மூலம் K.S சேதுமாதவன் அறிமுகமான 'நிஜங்கள்' என்ற படத்தில். அதன் கதை ஒரு பஸ் பயணத்தின்போது நடப்பது... அந்த பஸ்ஸில் இருக்கும் ஒருவனாக இவரை நடிக்க வைத்தார்கள். உண்மையில் அதுதான் முதல் படம். அது சரியாய் ஓடவில்லை.
இதனால சினிமா ஒத்துவராது, நாடகமே எதிர்காலமென அங்குமிங்குமாய்அலைந்துகொண்டிருந்த போதுதான் நாசர் ஆசிரியர், நண்பர், வழிகாட்டி அருண்மொழி மூலமாய் 'கல்யாண அகதிகள்' என்ற கே.பாலசந்தர் சாரின் படம். முதல் நாள் படப்பிடிப்பு. இவரோடு சரிதா, ஒய்.விஜயா போன்ற தேர்ந்த அனுபவமிக்க நடிகர்கள். பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் இவர் மனைவியை பலவந்தப்படுத்துவது போல் காட்சி. முழு நிகழ்வும் ஒரு ஷாட்டில் என வடிவமைத்திருந்ததால் இருநூறு அடியில் இரண்டு நிமிடங்களுக்கு வரும் தொடர் காட்சி. ஒத்திகைகள் நடந்தன.
நாசருக்கு இன்று வரை புகைபிடிக்கும் பழக்கம் கிடையாது. ஆனால் அந்தக் காட்சியில் புகைத்துக்கொண்டே நடிக்க வேண்டியிருந்தது.ஆனலும் ஒரே டேக்கில் ஓகேவானது. பாலசந்தர் சார் கைதட்ட எல்லோரும் தொடர்ந்தனர். நாசர் அவர் அருகே சென்றதும் `'குட், நல்லா வருவ'' என்று வாழ்த்தினார்.
அந்த பாலசந்தரின் ஆசி பெற காரணமான நாளின்று
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu