நடுரோட்டில் இறங்கி மாஸ் காட்டிய சேரன்..! என்ன நடந்தது தெரியுமா?

நடுரோட்டில் இறங்கி மாஸ் காட்டிய சேரன்..! என்ன நடந்தது தெரியுமா?
X
நடுரோட்டில் இறங்கி மாஸ் காட்டிய சேரன்..! என்ன நடந்தது தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப்பிடித்த இயக்குநர்களில் ஒருவர் சேரன். எதார்த்த படங்களுக்கு பெயர் போன சேரன், தமிழில் எடுத்த ஒவ்வொரு படங்களும் ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவுக்கு அவர் வழங்கிய ஆட்டோகிராஃப் காலம் முழுக்க நின்னு பேசும் ஒரு திரைப்படமாகும்.

வெற்றிக் கொடி கட்டு, தவமாய் தவமிருந்து என இவரது படங்கள் பல தேசிய விருதுகளைப் பெற்றது. இவரின் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், முரண், யுத்தம் செய் போன்ற படங்கள் ஒரு எதார்த்த நடிகராக இவரின் புகழைப் பாடிக்கொண்டிருக்கின்றன.

கடைசியாக 2019ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் நல்ல பெயரையும் பெற்றார் சேரன். முக்கிய இயக்குநராக இருந்த சேரன் சமீப நாட்களில் பெரிய அளவில் படங்களில் தலைகூட காட்டாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடலூரில் தனியார் பேருந்து ஓட்டுநரிடம் நடுரோட்டில் இறங்கி சண்டை போட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. நடுரோட்டில் காரில் இருந்து இறங்கி வந்து பேருந்தை நிறுத்தி அதன் ஓட்டுநரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தார் சேரன். ஓட்டுநரும் பதிலுக்கு சண்டை போட ஆரம்பித்தார். அங்குள்ளவர்கள் பின் சேரனை அடையாளம் கண்டு அவரை சமாதானம் செய்ய முயன்றனர்.

பேருந்து ஓட்டுநர், அதிக ஒலி எழுப்பியதே பிரச்னைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சேரன் ஓட்டிச்சென்ற காருக்கு பின்னே வந்த பேருந்து அந்த காரை முந்தி செல்ல ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இறங்கி வந்த சேரன் ஓட்டுநரைப் பார்த்து இதற்காக முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, சிறிது நேரம் அந்த இடம் பரபரப்பானது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!