பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்ற இயக்குநர் பாலா பிறந்த நாள்

பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்ற இயக்குநர் பாலா பிறந்த நாள்
X

இயக்குநர் பாலா

பல இயக்குநர்களால் பெரிதும் வியந்து பாராட்டப்படும் பாலா மற்ற திறமையான இயக்குநர்களைப் பாராட்டத் தவறியதில்லை.

தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள இயக்குநர் பாலா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்கள். தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்படும் திரைக் காவியங்களைப் படைத்திருக்கிறார்கள். ஆனால், வெகுசில இயக்குநர்கள் மட்டுமே தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

அதுவும் இந்தி உள்ளிட்ட அதிக மக்கள் பேசும் மொழிப் படங்களை இயக்காமலே இந்தி சினிமா ஆளுமைகளின் மதிப்பைப் பெறுவது சாதாரண விஷயம் அல்ல. அத்தகு அங்கீகாரத்தை தன் வெகுசில படங்கள் மூலமாகவே பெற்றிருப்பவரான இயக்குநர் பாலா இன்று (ஜூலை 11) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

தேனி மாவட்டத்தில் 1966 ம் ஆண்டு ஜூலை 11 ம் தேதி பிறந்து வளர்ந்தவரான பாலா, சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்து பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம் , நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார்.

மனித நாகரிகமே தெரியாத ஒருவர் அன்பாலும் நட்பாலும் முழுமையான மனிதனாவதைச் சித்தரித்த இந்தக் கதை தமிழ் சினிமா ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது. பாலாவின் இரண்டாம் படமான 'நந்தா' மூலம் நடிகர் சூர்யாவின் அசாத்திய திறமை வெளிப்பட்டது.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் ராஜ்கிரணும் குணச்சித்திர நடிகராக மறு அறிமுகமானார். இன்று வரை அவர் மதிப்புக்குரிய குணச்சித்திர நடிகராக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

இதுவரை எட்டுப் படங்களை இயக்கியிருக்கிறார் பாலா. அவற்றில் முதல் நான்கு படங்கள் பெற்ற வரவேற்பை அடுத்த நான்கு படங்கள் பெறவில்லை. ஆனால் ஒரு இயக்குநராக பாலாவின் முத்திரை இல்லாத படங்கள் இல்லவே இல்லை


'இருட்டிண்ட ஆத்மா'னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் 'சேது'. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் 'நந்தா'. ஜெயகாந்தனோட 'நந்தவனத்தில் ஒரு ஆண்டி'தான் 'பிதா மகன்'. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்', ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்', காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து 'நான் கடவுள்', ரெட் டீ' நாவலைத்தான் 'பரதேசி' என்று ஒரு படத்துக்கான கதையை முடிவு செய்ததாக பாலா கூறுகிறார்.

பல இயக்குநர்களால் பெரிதும் வியந்து பாராட்டப்படும் பாலா மற்ற திறமையான இயக்குநர்களைப் பாராட்டத் தவறியதில்லை. மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்த சுதா கொங்கரா இயக்கிய 'இறுதிச்சுற்று' படம் வெளியாகி விமர்சகர்களால் பாராட்டைப் பெற்றிருந்த நிலையில் அந்தப் படத்தைப் பாராட்டுவதற்காகவே ஒரு பேட்டி கொடுத்தார் பாலா. அந்தப் படத்தின் மூலம் தான் சுதா கொங்கராவிடமிருந்து திரைப்படம் இயக்கும் நுணுக்கங்கள் சிலவற்றைத் தான் கற்றுக்கொண்டதாக மனம் திறந்து பாராட்டினார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself