இயக்குநரும் நடிகருமான ஜி.எம். குமார் மருத்துவமனையில் அனுமதி

இயக்குநரும் நடிகருமான ஜி.எம். குமார் மருத்துவமனையில் அனுமதி
X

திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஜி.எம். குமார்

பிரபல இயக்குநரும் நடிகருமான ஜி.எம்.குமார் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இயக்குநரும் நடிகருமான திரைக்கலைஞர் ஜி.எம்.குமார் திடீர் உடல நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

ஜி.எம்.குமார் என்றதும் பலபேருக்கு உடனே தெரியவர நியாயமில்லை. ஆனால், 'அவன் இவன்' திரைப்படத்தில் நடித்த ஜமீன்தார் இவர்தான் என்றால், சட்டென்று நினைவுக், இயக்குநரும் நடிகருமான திரைக்கலைஞர் ஜி.எம்.குமார் திடீர் உடல நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கு வரும்.அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பாகப் பேசப்பட்டவர்தான் ஜி.எம்.குமார். இந்தப் படம் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதை பெற்றுத்தந்தது.

ஜி.எம்.குமாருக்கு நடிகர் என்கிற முகத்தைத்தாண்டி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதையாசிரியர் என பன்முகமும் உண்டு. 'அறுவடை நாள்' திரைப்படத்தின் மூலம்தான் இவர் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து, பாரதிராஜாவின் 'கேப்டன் மகள்' படத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார்.இதனைத்தொடர்ந்து, 'காதல் வைரஸ்', 'ராமச்சந்திரா', 'தொட்டி ஜெயா', 'வெயில்', 'மச்சக்காரன்', 'ஆயுதம் செய்வோம்', 'குருவி', 'தாரை தப்படை' என இன்னும் பல குறிப்பிடத்தக்க படங்களில் ஜி.எம்.குமார் நடித்துள்ளார்.

'தாரை தப்பட்டை' படம் இவருக்கு வித்தியாசமான பெயரை பெற்றுத் தந்தது. அதோடு அண்மையில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான 'நவம்பர் ஸ்டோரி'யில் க்ரைம் எழுத்தாளராக நடித்திருந்தார். அதுவும், தனுஷின் நடிப்பில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற 'கர்ணன்' படத்தில் இவர் ஏற்று நடித்த துரியோதனன் கதாபாத்திரமும் ஜி.எம்.குமாருக்கு மேலும் புகழ் சேர்த்தது.

இந்தநிலையில், இயக்குநரும் நடிகருமான திரைக்கலைஞர் ஜி.எம்.குமார் திடீர் உடல நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைந்து பூரண நலமடைந்து இல்லம் திரும்பி, மீண்டும் புதிய உற்சாகத்தோடு திரையில் இயங்க வேண்டும் என்கிற வேண்டுதல்களுடன் திரைப்பிரபலங்களும் ஜி.எம்.குமாரின் ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!