திரைப்படம் இயக்கப் போகிறேன்.. பிரபல காமெடி நடிகர் அதிரடி அறிவிப்பு…

திரைப்படம் இயக்கப் போகிறேன்.. பிரபல காமெடி நடிகர் அதிரடி அறிவிப்பு…
X

திருச்செந்தூர் கோயிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம்.

Yogi Babu New Movie -கதை, வசனம் எழுதி திரைப்படம் இயக்க உள்ளதாக திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு தெரிவித்தார்.

Yogi Babu New Movie -தமிழ் திரைப்படத் துறையில் தற்போது பிஸியான காமெடி நடிகர் யார்? என்றால் அனைவரும் கைக்காட்டுவது யோகி பாபுவை தான். இயக்குநர் அமீர் நடித்த யோகி படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகம் ஆனாலும் அதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவிலும் யோகி பாபு சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து, நடிகர்கள் விஜய், அஜீத், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து கலக்கிய யோகி பாபு, இயக்குநர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்து அனைவரையும் ஆச்சிரியத்துக்குள்ளாக்கினார்.

அதன் பிறகு காமெடி நடிகர் மற்றும் கதையின் நாயகன் என யோகி பாபு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக யோகி பாபு நடித்த தர்மபிரபு, கூர்கா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. சமீபத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வெளியான மண்டேலா திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மண்டேலா படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர் யோகி பாபு தற்போது விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், இந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் அவர் நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த லவ்டுடே படம் தற்போது தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் யோகி பாபு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:

நான் நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகன். அவருடன் சேர்ந்து நடிக்க நான் ஆசைப்படுகிறேன். விரைவில் கட்டாயமாக அவருடன் சேர்ந்து நடிப்பேன். நடிகர் ஷாருக்கானுடன் நான் இரண்டாவது படம் நடித்து வருகிறேன். அவர் நல்ல நடிகர் அதற்கு இயக்குனர் அட்லிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நான் கதை, வசனம் எழுதி ஒரு படம் இயக்க உள்ளேன். அதற்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை, தயாரிப்பாளர் கிடைத்ததும் படம் இயக்குவேன். மறைந்த நடிகர் விவேக் அப்துல் கலாம் உட்பட முக்கியஸ்தகர்கள் பலருடன் பயணம் செய்துள்ளார். நடிகர் விவேக் நல்ல கருத்துள்ள மனிதர். அப்துல் கலாம் போன்றவருடன் அவருக்கு நெருக்கம் உண்டு. நான் இயக்குனர் சொல்வதை மட்டும் தான் நடித்து வருகிறேன்.

நான் கதாநாயகனை போல் முகபாவனை இல்லாதவன் என ஒத்துக் கொள்கிறேன் ஆனால் மண்டேலா போன்ற படங்கள் கதாநாயகன்களை வைத்து இயக்கக்கூடிய படம் அல்ல, அதனால் நான் அது மாதிரியான படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்து வருகிறேன். என்னை காமெடியனாகவும், கதாநாயகனாகவும் பார்ப்பது ஒரே முகம் தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என நடிகர் யோகிபாபு தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!