பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் 'RC15'-ல் நடிகர் ராம்சரண்..!

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் RC15-ல் நடிகர் ராம்சரண்..!
X
பிரமாண்ட இயக்குநரான ஷங்கர் முதன்முதலாக தெலுங்கில் இயக்கும் படத்தில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடிக்கிறார்.

தெலுங்குப் படவுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண். தந்தையைப்போலவே இவரும் எதிர்காலத்தில் தெலுங்குப் படவுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருவார் என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. முன்னணி நாயகர்களின் வரிசையில் இடம்பிடித்துள்ள ராம் சரண் தற்போது, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தின்மூலம் தெலுங்கிலும் கால் பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'RC15' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது படத்திற்கு 'அதிகாரி' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தகட்டமாக விரைவில் வெளிநாடுகளில் நடத்தப்பட உள்ளதாகத் தயாரிப்புத் தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

தற்போது, படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் டிசம்பர் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், அண்மையில் தன்னுடைய 10-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார் ராம் சரண். தன்னுடைய காதல் மனைவி உபாசனா குறித்து அவர் உற்சாகமாக ட்வீட் செய்திருந்தார்.

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இவர்கள் குழந்தை குறித்து எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். இந்நிலையில் ராம் சரணின் மனைவி சத்குருவை சந்தித்து மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டே தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தக்கருத்து சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!