இளம் நடிகைகளுக்கு இணையாக போட்டோவை பதிவிட்டு கலக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

இளம் நடிகைகளுக்கு இணையாக போட்டோவை பதிவிட்டு கலக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்..!
X
நடிகை ரம்யா கிருஷ்ணனின் அண்மைப் போட்டோக்கள், இணைய தளமெங்கும் வைரலாகி வருகிறது.

actress ramya krishnan posted different photosதமிழ்த் திரையுலகில் 1980-90களின் முன்னணி நாயகியர்களில் நடிகை ரம்யா கிருஷ்ணன் குறிப்பிடத் தகுந்தவர். 1983-ம் ஆண்டு, தன்னுடைய 13 வது வயதில் 'வெள்ளை மனசு' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, முன்னணி நாயகர்களோடு இணைந்து, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

திரையுலகில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துவரும் ரம்யா கிருஷ்ணன் தனக்கென ஒரு தனித்த இடத்தை இதுவரையிலும் தக்கவைத்துக்கொண்டு வருகிறார் என்பது மிகையில்லை. இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'படையப்பா' படத்தில் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இப்போதும் எல்லோர் மனத்திலும் நிலையாக நின்றிருப்பது நிஜம். அதேபோன்றுதான் நடிகர் கமலஹாசனுடன் 'பஞ்சதந்திரம்' படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரமும்.

மேலும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தாலும், ரஜினியுடன் 'படையப்பா' படத்தில் நடித்ததற்குப் பின், இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது, இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராஜமாதா 'சிவகாமி தேவி' கதாபாத்திரத்தில் நடித்த 'பாகுபலி' திரைப்படம்தான். இப்படத்தின் மூலம் உலக அளவில் பேசப்படும் நடிகையாக மாறினார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

ஐம்பது வயதைக் கடந்துவிட்ட ரம்யா கிருஷ்ணன் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தோடு, வெங்கட் பிரபு இயக்கத்தில், 'பார்ட்டி' படத்திலும் கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பூட்டி பலரின்கனவில்அதகளப்படுத்தியிருப்பார்.

இந்தநிலையில் அண்மையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக வரும் ரம்யா கிருஷ்ணன் இளம் நடிகைகளுக்கு இணையாக அசத்தலான ஆடையணிந்து வந்து அசத்தியிருப்பார். அவ்வகையில் அந்நிகழ்ச்சிக்காக, அழகிய ஆரஞ்சு நிறப் புடவையில் போட்டோஷூட்டில் பங்கேற்றிருந்தார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வலம் வருகிறது என்பது எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்