படப்பிடிப்பு முடியும் முன்பே ஓடிடியில் விற்பனையான தனுஷ் படம்..!

படப்பிடிப்பு முடியும் முன்பே ஓடிடியில் விற்பனையான தனுஷ் படம்..!
X
Tamil Actor Ddhanush- நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படம், படப்பிடிப்பு முடியும் முன்பே ஓடிடி தளத்தில் அதிக தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது.

Tamil Actor டதனுஷ்- தனுஷின் வரவிருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் செப்டம்பர் 21 சென்னையில் பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

படத்தில், 'டாக்டர்' மற்றும் 'டான்' புகழ் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார், இது தனுஷுடன் அவரது முதல் வெளியீடாகும். 'கேப்டன் மில்லர்' படத்தை ராக்கி மற்றும் சானி காயிதம் புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், மற்ற தொழில்நுட்பக் குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

'கேப்டன் மில்லர்' 1950 களில் நடக்கும் ஒரு தீவிரமான ஆக்ஷன் கேங்க்ஸ்டர் திரைப்படம் என்று கூறப்படுகிறது, மேலும் இப்படம் தனுஷின் புதிய சாயலை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை அதிக தயாரிப்பு மதிப்பில் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில், அமேசான் ப்ரைம் நிறுவனம் 'கேப்டன் மில்லர்' ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் படப்பிடிப்பு முடியும் முன்னரே 'கேப்டன் மில்லர்' ஓடிடி உரிமை 38 கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்