நித்யாமேனனுக்கு விருது...! தனுஷ் சொன்ன அந்த வார்த்தை..!
திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ், ஜூனியர் திருச்சிற்றம்பலம் என்கிற பழம் கதாபாத்திரத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அன்பும், பாசமும், கோபமும் நிறைந்த பழமாகவே தனுஷ் வாழ்ந்திருந்தார் என்று சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு அமைந்திருந்தது.
திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பள்ளிப் பருவத்திலிருந்து பழத்தின் தோழியாக அவருக்கு ஆறுதலும், தைரியமும் அளித்து நின்றவர் ஷோபனா. தன் தோழனின் மீது கொண்ட காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் காட்சிகளில் நித்யா மேனன் தனது உணர்ச்சிகளை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருந்தார். அதற்காகவே அவருக்கு ஒரு தேசிய விருது கொடுக்கலாம்.
திருச்சிற்றம்பலம் திரைப்படம் நட்பு மற்றும் காதல் ஆகிய உணர்வுகளின் அழகை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியது. திரு மற்றும் ஷோபனாவின் நட்பு, பள்ளிப் பருவம் துள்ளலான தருணங்கள் முதல் வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் வரை நீடிக்கும் அழகான பிணைப்பை சித்தரித்தது.
மெகா ஹிட் "மேகம் கருக்காத" பாடல்
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று "மேகம் கருக்காதா" பாடல்தான். அனிருத்தின் இசையில் உருவான இந்தப் பாடல், தனுஷ் மற்றும் நித்யா மேனனின் அற்புதமான நடன அசைவுகளால் மேலும் சிறப்பு பெற்றது. ஜானி மாஸ்டரின் நடன இயக்கத்தில் உருவான இப்பாடலின் அசைவுகளை இன்றளவும் பலரும் கொண்டாடி வருகின்றனர். இப்பாடல் சிறந்த நடன இயக்கத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றது.
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் இசை, படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியது. அனிருத்தின் இசை, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மேலும் உயிர்ப்புடன் வழங்கியது. மேகம் கருக்காத பாடலின் வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் பின்னணி இசையும் பெரும் பாராட்டைப் பெற்றது.
இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம் திரைப்படம், தமிழ் சினிமாவின் பெருமையை மீண்டும் ஒரு முறை உலகறியச் செய்துள்ளது. தனுஷ், நித்யா மேனன், மித்ரன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினரின் அயராத உழைப்பிற்கும், திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் இது.
இந்த விருதுகள் அறிவிப்பு வெளியானதும் உடனடியாக தனுஷ் தனது சகாக்களுக்கு வாழ்த்துகளை பரிமாறினார். ஷோபனாவுக்கு கிடைத்த தேசிய விருது தனக்கே கிடைத்ததாக உணர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷின் டிவீட்
வாழ்த்துகள் திருச்சிற்றம்பலம் குழுவினரே..! ஷோபனாவுக்கு தேசிய விருது கிடைத்தது எனக்கே கிடைத்தது போன்றது. ஜானி மாஸ்டர், சதீஷ் மாஸ்டர் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இது ஒரு நல்ல தருணம் என அவர் வாழ்த்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu