அந்த இயக்குநருடன் மீண்டும் இணையும் தனுஷ்..! அப்ப கன்பாஃர்மா படம் ஹிட்டு!

அந்த இயக்குநருடன் மீண்டும் இணையும் தனுஷ்..! அப்ப கன்பாஃர்மா படம் ஹிட்டு!
X
சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்த படத்தில் சஞ்சய்தத் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சுனில் நரங் இந்த படத்தை தயாரிக்கிறார்.

வெற்றிப் பட இயக்குநருடன் மீண்டும் இணைந்து அதே போல ஒரு கதைக்களத்தில் படத்தை தர இருக்கிறாராம் தனுஷ். இதனால் படம் கன்பாஃர்மா ஹிட்டுதான் என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இடையில் இன்னும் இரண்டு படங்கள் இருந்தாலும் அதனை ஸ்கிப் செய்துவிட்டு இந்த இயக்குநருக்கு கால்ஷீட் தந்திருக்கிறாராம் தனுஷ். ஆனால் இயக்குநர்தான் சிக்கலில் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான தனுஷ், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்தார். இப்போது 50வது படத்தை நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. கடந்த மாதம் சன்பிக்சர்ஸ் நிறுவனமே இதனை அறிவித்தது.


தனுஷ் 50 படத்தை தாங்கள் தயாரிக்க இருப்பதை அறிவித்த சன்பிக்சர்ஸ் வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த படத்தை நிச்சயமாக தனுஷ்தான் இயக்குவார் என்று வெளியில் அரசல் புரசலாக தகவல் பரவி வந்தது. ஆனால் தனுஷ் இயக்கும் படம் வேறு இந்த படம் வேறு என்றும் கூறுகிறார்கள். ஒருவேளை தனுஷ் இந்த படத்தை இயக்கவில்லை என்றால் மீண்டும் மித்ரன் ஆர் ஜவஹரை இயக்க வைப்பார்கள் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால் அவர் மாதவனுடன் அடுத்த படத்துக்கான வேலைகளைத் துவங்கி அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், முதலில் சொன்னது போல தனுஷ்தான் இந்த படத்தை இயக்குகிறார் போல. தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள வாத்தி திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. தெலுங்கு சினிமா வாடை அடித்தாலும் கண்டென்ட் நல்ல கண்டென்ட்டாக இருந்ததால் தப்பியது. மேலும் படத்தில் சொன்ன கருத்து ஆழமானது. அதை ஜிவி பிரகாஷ் எடுத்துச் செல்லும் இசையில் அழுத்தமாக பதிவு செய்திருந்தனர்.


வாத்தி படத்தைத் தொடர்ந்து தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்ஷுடன் சந்தீப் கிஷணும் நடிக்கிறார். இலங்கை தொடர்பான சண்டைப் படமாக வரும் என கூறப்படுகிறது. இந்த படத்துக்கும் ஜிவி பிரகாஷ்குமார் தான் இசை என்பதால் அடுத்தடுத்து ஜிவியுடன் பயணம் செய்து வருகிறார் தனுஷ்.

தனுஷ் லைன் அப்:

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். சத்யஜோதி தியாகராஜன் படத்தை தயாரிக்கிறார். இந்த வருடம் படம் திரைக்கு வர இருக்கிறது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் நடிக்கவுள்ளார் தனுஷ். இந்த படத்தில் சஞ்சய்தத் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சுனில் நரங் இந்த படத்தை தயாரிக்கிறார்.

ராயன் (D50) என்று ரசிகர்கள் கூப்பிடும் பெயர் என்றாலும் இன்னும் பெயர் வைக்கப்படாத தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கவுள்ளார் என்கிறார்கள். படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் தனுஷிடன் விஷ்ணு விஷால், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.


இந்நிலையில், அடுத்ததாக கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராஜுடன் அடுத்த படத்தில் இணைவது என தனுஷ் முடிவு செய்திருக்கிறாராம். ஏற்கனவே சன்பிக்சர்ஸுடன் 50வது படத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதால், 51வது படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் என்று பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே கர்ணன் படத்தில் மிகப் பெரிய அரசியலைப் பேசியிருந்தனர் தனுஷ் - மாரி செல்வராஜ். அடுத்ததாக இந்த படத்திலும் உண்மைச் சம்பவத்தை தழுவிய கதையை பேசப்போகிறார்கள்.

Tags

Next Story