தனுஷ் படத்திற்கு கிளம்பும் எதிர்ப்பு: காரணம் இதுதான்

தனுஷ் படத்திற்கு கிளம்பும் எதிர்ப்பு: காரணம் இதுதான்
X

தனுஷ்

நடிகர் தனுஷின் புதிய படத்திற்கான தலைப்புக்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

படத் தலைப்புக்கும், நடிகர் தனுஷுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான் போலிருக்கிறது. தனுஷின் சினிமா படத் தலைப்புகள் சர்ச்சையில் சிக்குவது இது புதியதல்ல. ஏற்கனவே, 2006ஆம் ஆண்டில் வெளியான 'திருவிளையாடல் ஆரம்பம்' என்று படத்திற்கு தலைப்பு அப்போது எதிர்ப்பு கிளம்பியது.

நடிகர் சிவாஜி கணேசனின் திருவிளையாடல் படத்தின் பெயரை சூட்டுவதாக என்று, சிவாஜி சமூக நலப்பேரவையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். "கர்ணன்" படத்திற்கு தலைப்பு சூட்டியபோதும், அது சிவாஜி ரசிகர்களை கோபமூட்டியது. பஞ்சமி நில விவகாரம் பற்றி பேசிய 'அசுரன்' படத்தை சுற்றியும் சர்ச்சைகள் வலம் வந்தன.

அந்த வகையில், இப்போது தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படம், மீண்டும் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்த படத்திற்கு 'திருச்சிற்றம்பலம்' என்று பெயர் சூட்டி இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கம் போல, இதற்கும் எதிப்பு கிளம்பி இருக்கிறது. படத்தலைப்பு, இந்து மத ஆர்வலர்கள் சிலருக்கு எரிசலூட்டியுள்ளது. 'திருச்சிற்றம்பலம்' என்பது 'சிவன்'; எப்படி இந்த பெயரை படத்திற்கு வைக்கலாம் என்று, சமூக வலைதளங்களில் இந்து ஆர்வலர்கள் சிலர், வரிந்து கட்டிக் கொண்டு, எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!