நடிகையுடன் ஓட்டம் பிடித்த நடிகர் தனுஷ்

நடிகையுடன் ஓட்டம் பிடித்த நடிகர் தனுஷ்
X

நடிகர் தனுஷ்

Dhanush Latest News - ரசிகர்கள் திரண்டதால் நடிகர் தனுஷ் தியேட்டரில் இருந்து, நடிகை ராஷி கன்னாவுடன் ஓட்டம் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhanush Latest News -மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை ரேவதி கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக நித்யா மேனன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது. ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகியுள்ள தனுஷின் படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர்.


இந்நிலையில் நடிகர் தனுஷ் தியேட்டரில் இருந்து நடிகையுடன் ஓட்டம் பிடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது சென்னை ரோஹினி தியேட்டரில் நடிகர் தனுஷ் முதல் நாள் முதல் காட்சியை நடிகை ராஷி கன்னாவுடன் பார்த்தார். ஷோ முடிந்ததும் ரசிகர்கள் திரண்டதை பார்த்த நடிகர் தனுஷ், ராஷி கன்னாவுடன் வேக வேகமாக ஓட்டம் பிடித்தார். நடிகையின் கையை பிடித்துக்கொண்டு பதறியடித்தபடி ஓடும் தனுஷை, ரசிகர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். பின், ஒருவழியாக தப்பித்து, பாதுகாவலர்கள் உதவியுடன் நடிகையுடன் தனுஷ் காரில் ஏறி, சென்று விடுகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன், 'சுள்ளான்' படம் வெளியான போது, இப்படி ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி நடிகர் தனுஷின் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து, இப்படி ரசிகர் கூட்டம் திரண்டு வந்தாலே, தெறித்து ஓடி விடுவாராம் நடிகர் தனுஷ்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture