Leo Update என்னங்க இப்படி ஆயிடிச்சி! ரசிகர்கள் பாவம்பா!

Leo Update என்னங்க இப்படி ஆயிடிச்சி! ரசிகர்கள் பாவம்பா!
X
லியோ படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்களில் பல விசயங்கள் புரளி என்று தெரிந்த ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

லியோ படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் குவிந்துகொண்டே இருந்த நிலையில் அதில் நிறைய விசயங்கள் உண்மை இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியாகும் படங்களில் அதிகம் எதிர்பார்க்கும் படம் என்றால் அதில் லியோ தான் டாப். காரணம் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளது மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், பாலிவுட் நடிகர்கள் என இணைந்திருப்பது.

மேலும் விஜய்யுடன் திரிஷா மீண்டும் இணையும் படம் இது என்பதால் ரசிகர்கள் தங்களது குழந்தை பருவ நினைவுகளை அசை போடத் துவங்கிவிட்டனர். அந்த அளவுக்கு இந்த படத்தில் நட்சத்திர பட்டாளம் இருக்கிறது. மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம், அர்ஜூன், சஞ்சய் தத் என ஆரம்பத்தில் ஆரம்பித்தவர்கள் அடுத்தடுத்து மடோன்னா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப், தனுஷ் என புதிது புதிதாக பலரையும் உள்ளே சேர்த்துக்கொண்டு வருவதாக தகவல் பரவி வருகிறது.

ஆனால் தனுஷ் படத்தில் இல்லை எனவும், அவர் தனது சொந்த இயக்கத்தில் 50வது படத்தை சன் பிக்சர்ஸுக்காக உருவாக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாகவே தகவல் வருகின்றது.

இந்த படத்துக்காகத்தான் தனுஷ் மொட்டை போட்டிருக்கிறார் வேறு. அப்படி இருக்கையில் அவர் எப்படி லியோ படத்தில் நடிப்பார். தனது படத்தில் கதாபாத்திரத்துக்காக மொட்டையாக வரும் ஒரு கதாநாயகன் இன்னொரு நாயகனின் படத்தில் அப்படி வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.

இதுமட்டுமின்றி லியோ படப்பிடிப்பே கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இனி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கி நடைபெற இருக்கும் நிலையில், ஏன் தனுஷை இந்த படத்தில் நடிக்க வைக்கப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இதனால் தனுஷ் இந்த படத்தில் நடிப்பது புரளிதானே ஒழிய வேற எந்த உண்மையும் இல்லை என அடித்து சொல்கிறார்கள் சினிமா டிராக்கர்கள்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!