தனுஷ்தான் இந்தியாவின் காதல் இளவரசன்! இந்த படம் மட்டும் வந்தா...! அப்படி ஒரு கதையாம்..!

தனுஷ்தான் இந்தியாவின் காதல் இளவரசன்! இந்த படம் மட்டும் வந்தா...! அப்படி ஒரு கதையாம்..!
X
தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் ஹிந்தி திரைப்படம் வெளியானால் அன்று முதல் இந்தியாவின் காதல் இளவரசனே தனுஷ்தான்

தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் ஹிந்தி திரைப்படம் வெளியானால் அன்று முதல் இந்தியாவின் காதல் இளவரசனே தனுஷ்தான் என தகவல்கள் அடிபடுகின்றன. அப்படி ஒரு கதையாம்.

கமல்ஹாசன் நடிப்பில் ஏக் துஜே கேலியே படம் வெளியானதை அடுத்து அடுத்த 20, 30 ஆண்டுகளுக்கு கமல் காதல் இளவரசனாக கொண்டாடப்பட்டார். சென்னை, பெங்களூரு, மும்பை என இந்தியாவின் டாப் நகரங்களில் இன்றும் கமல்ஹாசன் என்றால் அப்படி ஒரு கிரேஸ். அதற்கு அடுத்தபடியாக கமல்ஹாசனையும் மிஞ்சும் வகையில் ஒருவர் வருகிறார் என்றால் அது தனுஷ்தான்.

கமல்கூட பாலிவுட்டோடு நின்றுவிட்டார். தனுஷ் ஹாலிவுட்டிலும் கொடி பறக்க வைத்திருக்கிறார். அடுத்த ஹாலிவுட் படத்தில் அவர் சினிமேட்டிக் பிரபஞ்சத்துக்குள்ளேயே போக வாய்ப்பு வந்துள்ளது. இதேபோல இன்னொரு சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஆனந்த் ராய் யூனிவர்ஸ். அவரது இயக்கத்தில் தேரே இஸ்க் மெய்ன் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், அடுத்ததாக இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகும் 'தேரி இஷ்க் மெய்ன்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கி, 2025 ஆம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

இந்த காதல் கதையின் நாயகியாக கிரிட்டி சனான் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு இந்தப் படத்திற்காக கியாரா அத்வானி மற்றும் திரிப்தி டிம்ரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதை அப்படி ஒரு காவியமாக இருக்குமாம். காதல் தோல்வியை மையமாகக் கொண்ட ஒன்று தான் என்றாலும் அதில் தனுஷுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஏக் துஜே கேலியே போன்ற ஒரு படத்தில் நடித்துதான் தனுஷ் நல்ல பெயரை எடுத்தார். ராஞ்சனா என்ற பெயரில் தமிழில் வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார். ஆனந்த் எல் ராயின் கலர் யெல்லோ பட நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் கூட்டணி இதற்கு முன்பு 'ரஞ்சனா' மற்றும் 'அத்ரங்கி ரே' ஆகிய படங்களில் இணைந்து வெற்றி பெற்றிருந்தனர். இந்த மூன்றாவது கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த மேலும் தகவல்களை விரைவில் நமது தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!