தனுஷ் ஜோடியாக விஜய் பட நாயகி? வேற லெவல் அப்டேட்!

தனுஷ் ஜோடியாக விஜய் பட நாயகி? வேற லெவல் அப்டேட்!
X
தனுஷின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் பட நாயகியை ஒப்பந்தம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் விஜய் ரசிகையை Dhanush and Rashmika Movie Tamil ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனைத் தொடர்ந்து கமெர்ஷியலாகவும் கலைநயத்துடனும் கூடிய படங்களில் நடித்து வெற்றி பெற்ற நாயகன் என்றால் அது தனுஷ்தான். இவரை கமல்ஹாசனுடன் ஒப்பிடுவதற்கு காரணம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் தனுஷ் நடித்து வருவதுதான்.

தனுஷ் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகனும், இவர்களுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து அவர் தனது சொந்த இயக்கத்திலேயே சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படம் நடிக்க இருக்கிறார்.

தனுஷ் நடிக்கும் அவரது 50வது படத்தை டி50 என்று அழைக்கிறார்கள். இந்த படத்தில் தனுஷ் இரண்டு கெட்டப்களில் நடிப்பதாகவும் இரண்டு நாயகிகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு பட இயக்குநரான சேகர் கம்முலா படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளை இயக்குநர் இப்போது கவனித்து வருகிறார். இந்த படத்தில்தான் தனுஷ் ஜோடியாக அந்த விஜய் ரசிகை கதாநாயகியை ஒப்பந்தம் செய்யப் போகிறார்களாம்.

தனுஷ் ஜோடியாக புதுமுக நடிகைகளே பெரும்பாலும் அனைத்து படங்களிலும் நடிப்பார்கள். ஷ்ரேயா, மீரா ஜாஸ்மின், திவ்யா, நயன்தாரா, ஹன்சிகா, ஜெனிலியா, டாப்ஸி, தமன்னா, ஷ்ருதி, பார்வதி, நஸ்ரியா, அமலாபால், அமிரா தஸ்ருத், காஜல் அகர்வால், சாய்பல்லவி, திரிஷா, எமி ஜாக்சன், கீர்த்தி சுரேஷ், அனுபமா, மடோன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சு வாரியர், ஐஸ்வர்யா லட்சுமி, மேகா ஆகாஷ், ரெஜிஷா விஜயன், மெஹ்ரீன் பிரசாடா, மாளவிகா மோகனன், நித்யா மேனன், சம்யுக்தா மேனன், பிரியங்கா மோகன் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்.

தனுஷ், ராஷ்மிகா ஜோடியின் Dhanush and Rashmika Movie Tamil கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!