கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் தீபிகா படுகோனே?

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் தீபிகா படுகோனே?
X
Indian 2 Movie - கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

Indian 2 Movie - விக்ரமுக்கு கிடைத்த பலத்த வரவேற்பிற்குப் பிறகு , கமல்ஹாசனுடன் ஷங்கரின் இந்தியன் 2 மீண்டும் தொடங்க உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், வரவிருக்கும் படம் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும் . இந்தியன் 2 முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்த காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடித்து குழந்தையும் பிறந்து விட்டது. இந்நிலையில், தீபிகா படுகோனுக்கு பெரும் சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கும் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது. முன்னதாக, லைகா புரொடக்சன்ஸ் மூலம் இப்படத்திற்கான வேலைகள் விரைவில் தொடங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தினார்.


இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைகிறார். அவர் விக்ரமுக்குப் பிறகு இரண்டாவது முறையாக கமலுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

இயக்குநர் ஷங்கர் தற்போது ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!