கருமுட்டையை முன்பே சேகரித்து பாதுகாக்க முடிவு: நடிகர் ராம்சரணின் மனைவி

கருமுட்டையை முன்பே சேகரித்து பாதுகாக்க முடிவு: நடிகர் ராம்சரணின் மனைவி
X

ராம் சரண்- உபாசனா

ram charan, Upasana Kamineni - திருமணத்தின் ஆரம்பத்திலேயே கருமுட்டையை பாதுகாக்கும் முறையைத் தேர்ந்தெடுத்ததாக நடிகர் ராம்சரணின் மனைவி தெரிவித்துள்ளார்.

ram charan, Upasana Kamineni - திருமணத்தின் ஆரம்பத்திலேயே கருமுட்டையை பாதுகாக்கும் முறையைத் தேர்ந்தெடுத்ததாக நடிகர் ராம்சரணின் மனைவி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ராம்சரண் ‘ஆர்ஆர்ஆர்.’ படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது ஹாலிவுட் படங்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், ராம்சரண்-உபாசனா தம்பதி தனது முதல் குழந்தையை ஜூலை மாதத்தில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுப்ப்பின் தங்களது குழந்தையை எதிர்பார்த்துள்ளனர்.

Upasana Konidela, freezing eggs

ஒரு அம்மாவாக ஒரு புதிய பயணத்தைத் தொடங்கவிருக்கும் உபாசனா, சமீபத்தில் தனது முதல் கர்ப்பத்தைப் பற்றித் திறந்து, அவரும் ராம் சரணும் தங்கள் திருமணத்தின் ஆரம்ப கட்டத்தில் தனது முட்டைகளை உறைய வைக்க முடிவு செய்ததை வெளிப்படுத்தினார்.

ram charan news, ram charan upasana pregnant

இதுகுறித்து ராம் சரணின் மனைவி உபாசனா சமீபத்திய பேட்டி ஒன்றில், “திருமணமான புதிதில் நாங்கள் இருவரும் எங்கள் கரியரில் கவனம் செலுத்த விரும்பியதால், அப்போதே கருமுட்டையை சேகரித்து பாதுகாக்க (egg freezing process) முடிவு செய்தோம். இப்போது ஒரு குழந்தையை பெற்று, அதை வளர்க்கும் அளவுக்கு நாங்கள் இருவரும் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை நிலையில் மேம்பட்டு இருக்கிறோம். இந்த முடிவில் எங்கள் இருவருக்குள்ளும் எந்தவிதமான எண்ணங்களும் குறுக்கே வரவில்லை. அது எங்கள் உறவுக்கு நாங்கள் கொடுத்த மதிப்பு” எனக் தெரிவித்துள்ளார்.

tollywood, ram charan latest news

மிகவும் விரும்பப்படும் பிரபல ஜோடிகளான ராம் சரண் மற்றும் உபாசனா பல வழிகளில் பலருக்கு உத்வேகமாக இருந்து வருகின்றனர், இப்போது, பெற்றோருக்கான அவர்களின் பயணம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அழகான பயணத்தை இருவரும் ஒன்றாகத் தொடங்கும்போது, தம்பதியருக்கு எல்லா அன்பையும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகிறோம். அவர்களின் மகிழ்ச்சிக்குரிய தருணம் வரும் ஜூலை மாதம் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!