சிரிச்சி சிரிச்சி வயிறு வலி... கவலைகளை மறக்கச் செய்யும் DD ரிட்டர்ன்ஸ் திரைவிமர்சனம்

சிரிச்சி சிரிச்சி வயிறு வலி... கவலைகளை மறக்கச் செய்யும் DD ரிட்டர்ன்ஸ் திரைவிமர்சனம்
X
நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குநர் ப்ரேம் ஆனந்த் இயக்கி கடந்த ஜூலை 28 ம் தேதி வெளிவந்த DD Returns Movie Review in Tamil

நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குநர் ப்ரேம் ஆனந்த் இயக்கி கடந்த ஜூலை 28 ம் தேதி வெளிவந்த DD Returns Movie Review in Tamil | DD ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. DD ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு DD Returns Movie Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். RK எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் சந்தானம், சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

OfRo இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

திரைவிமர்சனம் மற்றும் ரேட்டிங் | DD Returns Movie Review in Tamil

8.5/10

படத்தின் டிரைலர் | DD Returns Movie Trailer

DD ரிட்டர்ன்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை DD Returns Movie OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : DD ரிட்டர்ன்ஸ் (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : ஜூலை 28

இயக்குநர் : ப்ரேம் ஆனந்த்

தயாரிப்பாளர் : C ரமேஷ்குமார்

திரைக்கதை : ப்ரேம் ஆனந்த்

கதை : ப்ரேம் ஆனந்த்

நடிப்பு : சந்தானம், சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், விஜயன்

இசை : OfRo

ஒளிப்பதிவு : தீபக் குமார் பாதி

எடிட்டிங் :

தயாரிப்பு நிறுவனம் :RK எண்டர்டெய்ன்மெண்ட்

-

DD ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | DD Returns Movie Padam Eppadi Irukku ? Twitter Review

@cheyyarubalu22 | சைக்கோ சகதியில் கோடம்பாக்கத்தையே போட்டு புரட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில் அடிவயிறு அல்சராகிவிடுமளவிற்கு ஒரு சிரிப்பு கூட்டணி தந்துள்ள படம்தான் DD Returns 😀

@sekartweets | #DDReturns - A hilarious horror comedy that ticks all the boxes. The film’s director has smartly included all the pop culture references right from Squid Game, Pushpa Ooo Aantava to unskippable YouTube Vasanth and Co ad to tickle our funny bones. @iamsanthanam is truly back! Should work at the box office for sure

@Karthikravivarm | #DDReturns fun max 😁😁🤣 Motta Rajendran, Kingsley, Fefsi Vijayan 🤣🤣🤣 Santa is back 👍

DD ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கு? | DD Returns Movie Padam Eppadi Irukku ?

அடல்ட் காமெடி எதுவும் இல்லாமல், ஹீரோயிசம் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடியில் இறங்கி அடித்திருக்கின்றனர் சந்தானம் - இயக்குநர் பிரேம் ஆனந்த். குளுகுளு, ஏஜென்ட் கண்ணாயிரம் மாதிரியான சீரியஸான படங்கள் தனக்கு ஒத்துவரவில்லை என்று உணர்ந்து தன் டிரேட்மார்க் காமெடிகள் நிறைந்த பேய் படத்துக்குள் புகுந்திருக்கிறார் சந்தானம்

கதைப்படி காமெடி படம்தானே, சிரிக்க வைக்கவேண்டியதுதானே வேலை என்று படத்தை ஏனோதானோவென்று நகர்த்தாமல் இந்த கதைக்குள்ளும் சஸ்பென்ஸ் கொண்டு வந்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் பிரேம் ஆனந்த். நிறைய கதாபாத்திரங்கள் கதைக்குள் வந்து சென்றாலும் எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறார்.

சாதாரணமாக ஆரம்பிக்கும் படம் கொள்ளை கும்பல், அவர்களுக்குள்ளான ஒப்பந்தம், அதில் போயி சிக்கும் கதையின் முன்னணி பாத்திரங்கள், சேஸிங், தேவையான இடங்களில் காமெடி என எழுத்தில் அத்தனை தெளிவு. இடைவேளையின்போதுதான் நமக்கு தவுசண்ட் வாலா வெடி பற்றவைக்கப்படுகிறது. அதன் பிறகு படத்தில் தொடர் சிரிப்புதான்.

சந்தானம் தனது நடிப்பில் வழக்கம்போல கலக்கியிருக்கிறார். இது அவரது கம்ஃபோர்ட் ஜானராக இருந்தாலும் வேற லெவலுக்கு உழைத்திருக்கிறார். காமெடி வசனங்களில் சந்தானத்தின் ஸ்டைல் தெளிவாக தெரிகிறது. மாறன், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸி, தங்கதுரை, ஃபெஃப்சி விஜயன், பிபின், தீபா என பார்த்தாலே சிரிப்பு வரும் உடல்மொழி காமெடி நடிகர்களை வைத்தே பாதி வெற்றியை பறித்துவிட்டார்கள்.

மொத்தத்தில் நல்ல படத்தை பார்த்துவிட்டு சிரித்து மகிழ இந்த படத்தை தியேட்டரில் காணலாம்.

-

DD ரிட்டர்ன்ஸ் கதைச் சுருக்கம் | DD Returns Movie Story Explained

ஃபெப்சி விஜயன் புதுச்சேரியில் மிகப் பெரிய டான். அவரது மகன் ரெடின் கிங்ஸ்லீக்கு திருமணம் செய்ய ஒரு பெண்ணை பார்க்கிறார். அந்த பெண் திடீரென ஓடி போக, அவரது தங்கையான சுரபியை, ரெடினுக்கு திருமணம் செய்ய நினைக்கிறார் விஜயன். சுரபியின் காதலர் சந்தானம் பணம் கொடுத்தால் தன் காதலியை விட்டுவிடுவார்கள் என பணத்தை திரட்ட அது ஒரு பங்களாவில் மாட்டிக் கொள்கிறது.

பங்களாவுக்கு சென்று பணத்தை மீட்கச் செல்கிறார் சந்தானம். அங்குதான் சிரிப்பு வெடி மத்தாப்பாய் வெடிக்கிறது. பணத்தை பங்களாவிலிருந்து மீட்டு அதனைக் கொடுத்து காதலியை மீட்டாரா சந்தானம் என்பதே படத்தின் மீதி கதை.

-

DD ரிட்டர்ன்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி DD Returns Movie OTT Release Date

திரைப்படம் கடந்த ஜூலை 28 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : ஜூலை 28

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

DD ரிட்டர்ன்ஸ் OTT: FAQ

DD ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் ஆகிவிட்டதா? Is DD Returns Movie out?

ஆம். DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

DD ரிட்டர்ன்ஸ் படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is DD Returns Movie hit or flop?

DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

DD ரிட்டர்ன்ஸ் படத்தின் இயக்குநர் யார் ? Who is director of DD Returns Movie ?

ப்ரேம் ஆனந்த் DD ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!