தசரா படம் எப்படி இருக்கு?
ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ள படம் தசரா இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நாயகனாக நானியும் நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகியுள்ள படம் எப்படி இருக்கு, நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பு, திரைக்கதை, விமர்சனம் என அனைத்தையும் இந்த பகுதியில் காண்போம்.
தெலுங்கு திரையுலகில் பாகுபலி, புஷ்பா, ஆர் ஆர் ஆர் போன்ற படங்கள் தமிழிலிலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன. கடைசியாக நானி நடிப்பில் வெளியான சில படங்கள் தமிழிலும் வெளியானாலும் அவை போதுமான அளவுக்கு விளம்பரம் செய்யப்படாததால் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. முக்கியமாக ஷாம் சிங்காராய் திரைப்படம் தமிழில் கொண்டாடப்பட்டது. ஓடிடியில் ரிலீஸ் ஆன பிறகு தமிழ் ரசிகர்கள் நானி நம்ம ஊருக்கு வர வேண்டிய ஆளு என கொண்டாடித் தீர்த்தனர்.
இந்த முறை அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என 2 வாரங்களுக்கு முன்னிருந்தே தமிழில் கவனம் செலுத்திய படக்குழு, நானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை தமிழில் அதிக விளம்பரம் செய்யும் வகையில் திட்டமிட்டது.
நானி இருக்கும் அனைத்து டிக்டாக்கர், ரீல்ஸ், ஷார்ட்ஸ் செய்பவர்களுடன் ஆடி வீடியோ வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது.
நானியும் கீர்த்தி சுரேஷும் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இந்த படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். அவரது மகள் தீ குரலில் மச்சினி பாடல் வேற லெவலுக்கு வைரலாகியுள்ளது.
தசரா கதைச்சுருக்கம்
நிலக்கரி சூழ்ந்துள்ள கிராமத்தில் நானியும் 160 குடும்பங்களும் வாழ்ந்து வருகிறார்கள். அங்கே நிலக்கரி திருடி பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார் கதாநாயகன் நானி. அவருக்கும் அவர் நண்பருக்கும் ஒரே பெண் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் நானி அந்த காதலை மறைத்துவிட்டு நண்பனுக்கு அந்த பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த உண்மையை அறிந்த அவரது நண்பர் அன்றிரவு நானியை சந்தித்து பேசச் செல்கிறார். ஆனால் அந்த இடத்திலேயே கொல்லப்படுகிறார். இவரைக் கொன்றது யார் என்பதே படத்தின் கதை.
தசரா விமர்சனம்
லவ்வர் பாயாக வந்த நானி இப்போது கொஞ்சம் முரட்டு பாயாக வந்திருக்கிறார். கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக மாறியிருந்தாலும் ரக்கட் பாய் லுக் நானிக்கு நன்றாக இல்லை.
எப்ப பாரு குடி குடியென்று இருக்கும் ஊர் அது. அதில் இருக்கும் அரசியலும் அதை அரசியல்வாதிகள் எப்படி தங்கள் லாபத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் காட்டியிருக்கிறார்கள்.
கிளைமாக்ஸ் ஃபைட் சீன் வேற லெவலுக்கு இருக்கிறது. எதார்த்தத்தை மீறியதாக இருந்தாலும் நன்றாக வந்துள்ளது.
கீர்த்தி சுரேஷ், சைன் டாம் சாக்கோ நடிப்பு பரவாயில்லை. நானி முழு படத்தையும் தன் தோளில் தாங்குகிறார்.
பாடல்கள் சிறப்பு என்றாலும் பின்னணி இசை எங்கேயோ கேட்டது போலவே இருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாள் நல்ல விறுவிறுப்பாக சென்றிருக்கிறது. படத்தை காண பலரும் ஆவலாக காத்திருந்திருப்பது முதல் நாள் காட்சியிலேயே தெரிந்தது. இந்தியா முழுவதும் முதல் நாள் மட்டும் 17 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றிருக்கிறது தசரா திரைப்படம். இதில் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் தமிழிலிலிருந்து வந்ததுதான். பெங்களூரிலும் ஓரளவுக்கு வசூல் கிடைத்துள்ளது.
இந்த வார இறுதியில்தான் படம் பார்க்க நிறைய பேர் வருவார்கள் என்பதால் தசரா மேலும் வசூல் மழை பெறும் என்று கணிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu