Dasara Day 1 வசூல் வேட்டை நடத்திய நானி.. பிக்-அப் ஆகும் தசரா!
எதார்த்த கதையில் தெலுங்கு சினிமா ஃபேண்டஸியைப் புகுத்தி எடுக்கப்படும் படங்கள் தற்போது இந்தியா முழுமைக்கும் நல்ல வரவேற்பை பெறுகின்றன.
புஷ்பா படத்தின் கதையும் சாதாரணமான ஒருவரின் வாழ்க்கைதான். ஆனால் அதில் வரும் காட்சிகள் நம்பமுடியாதவையாக அதிக ஆக்ஷன் ஸ்டண்ட் நிறைந்தவையாக இருக்கும். அதுபோல ஒரு படம்தான் தசரா. ஆனாலும் இது புஷ்பா அளவுக்கு எதார்த்தத்தை மிஞ்சி போகவில்லை. நானிக்கே உரிய நடிப்புடன், கிராமத்து கெட்டப்பில் சற்று வித்தியாசமான முயற்சியாக வெளிவந்துள்ளது தசரா படம்.
நானி, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள இந்த படத்துக்கு இசை மிகப்பெரிய பலம். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் படத்தின் பின்னணியும் அழகாக நகர்கின்றன. அழுக்கான மக்களின் தூய்மையான மனதை இயக்குநர் காட்ட முயற்சி செய்திருக்கிறார்.
கதைக்களம்
நிலக்கரி சூழ்ந்துள்ள கிராமத்தில் நானியும் 160 குடும்பங்களும் வாழ்ந்து வருகிறார்கள். அங்கே நிலக்கரி திருடி பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார் கதாநாயகன் நானி. அவருக்கும் அவர் நண்பருக்கும் ஒரே பெண் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் நானி அந்த காதலை மறைத்துவிட்டு நண்பனுக்கு அந்த பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த உண்மையை அறிந்த அவரது நண்பர் அன்றிரவு நானியை சந்தித்து பேசச் செல்கிறார். ஆனால் அந்த இடத்திலேயே கொல்லப்படுகிறார். இவரைக் கொன்றது யார் என்பதே படத்தின் கதை.
விமர்சனம்
லவ்வர் பாயாக வந்த நானி இப்போது கொஞ்சம் முரட்டு பாயாக வந்திருக்கிறார். கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக மாறியிருந்தாலும் ரக்கட் பாய் லுக் நானிக்கு நன்றாக இல்லை.
எப்ப பாரு குடி குடியென்று இருக்கும் ஊர் அது. அதில் இருக்கும் அரசியலும் அதை அரசியல்வாதிகள் எப்படி தங்கள் லாபத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் காட்டியிருக்கிறார்கள்.
கிளைமாக்ஸ் ஃபைட் சீன் வேற லெவலுக்கு இருக்கிறது. எதார்த்தத்தை மீறியதாக இருந்தாலும் நன்றாக வந்துள்ளது.
கீர்த்தி சுரேஷ், சைன் டாம் சாக்கோ நடிப்பு பரவாயில்லை. நானி முழு படத்தையும் தன் தோளில் தாங்குகிறார்.
பாடல்கள் சிறப்பு என்றாலும் பின்னணி இசை எங்கேயோ கேட்டது போலவே இருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாள் நல்ல விறுவிறுப்பாக சென்றிருக்கிறது. படத்தை காண பலரும் ஆவலாக காத்திருந்திருப்பது முதல் நாள் காட்சியிலேயே தெரிந்தது. இந்தியா முழுவதும் முதல் நாள் மட்டும் 17 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றிருக்கிறது தசரா திரைப்படம். இதில் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் தமிழிலிலிருந்து வந்ததுதான். பெங்களூரிலும் ஓரளவுக்கு வசூல் கிடைத்துள்ளது.
இந்த வார இறுதியில்தான் படம் பார்க்க நிறைய பேர் வருவார்கள் என்பதால் தசரா மேலும் வசூல் மழை பெறும் என்று கணிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu