தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்
X

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார்.

தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார்.

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் 15 ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட கோவில் ஆகும். 1990 ஆம் ஆண்டில் இந்த கோவிலின் கோபுர புறணமைப்பு பணிகள் ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

திரையுலகத்தின் காமெடி நடிகரான யோகி பாபு தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் அனைத்து கோயில்களிலும் சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்றைய தினம் திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து இன்று தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சினிமா படப்பிடிப்பிற்கு கலந்து கொள்ள வருகை தந்த நடிகர் யோகி பாபு தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

காசி விஸ்வநாதர், உலகம்மனை தரிசனம் செய்த அவர் அடுத்ததாக முருகப் பெருமானை தரிசனம் செய்தார். தொடர்ந்து அவரை சூழ்ந்த ரசிகர்களிடம் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டார். கோவிலில் சுவாமி தரிசனத்தை முடித்து கிளம்பிய யோகி பாபுவின் வாகனத்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். நடிகர் யோகி பாபுவின் வருகை அப்பகுதியில் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!