மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
X

நடிகர் யோகிபாபு. 

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம் செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல காமெடி நடிகர் யோகி பாபு கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவர் அம்மனுக்கு பட்டுப் புடவை சாத்தி தரிசித்து வழிபாடு நடத்தினார். முன்னதாகத் தான் நடிக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டி பகவதியம்மனுக்கு விளக்கேற்றியும் உடல் நலம் வேண்டி மரத்தால் ஆன கை, கால், தலை உருவ பொம்மைகளைக் காணிக்கையாக்கியும் நேர்த்திக் கடன் செலுத்தினார்.

Tags

Next Story