/* */

சின்னத்திரையாளர்களின் "கொரோனா பரப்பும் பணி" தொடருதாமில்லே

சில சோ கால்ட் புரொடியூசர்கள் தங்களுக்கு சொந்தமான காட்டேஜ், பண்ணைகளில் ஷூட் செய்ய அனுமதித்து வருவதாக ஒரு தகவல்.

HIGHLIGHTS

சின்னத்திரையாளர்களின் கொரோனா பரப்பும் பணி தொடருதாமில்லே
X

சின்னத்திரையாளர்களின் கொரோனா பரப்பும் பணி தொடருதாமில்லே..

இந்த லாக்டவுன் தொடங்குன நாளில் இருந்து முடங்கிய தொழில்களின் எண்ணிக்கை மிக பெரிசு..அதில் ஒன்றுதான் சினிமா இண்டஸ்ட்ரி..இந்த ஊரடங்கால் மிகப் பெரிய இழப்பை சந்தித்துக் கொண்டிருப்பது திரையரங்கு உரிமையாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை..மூடிக்கிடக்கும் தியேட்டருக்கு கரண்ட் பில், வரி, ஒர்க்கர்ஸ் சம்பளம் எதுக்கும் தீர்வோ அல்லது உதவியோ கிடைக்காத சூழலில் விழி பிதுங்கி போய் கிடக்கிறார்கள்..கலையுலகம் மூலம் ஆட்சிக் கட்டிலுக்கு வந்த கலைஞரின் புதல்வர் எல்லோர் துயரத்தையும் புரிந்து உதவுவது போல் தியேட்டர் அதிபர்களுக்கும் ஆதரவுக் கரம் கொடுப்பார் என்று பலத்த நம்பிக்கையுடன் நாட்களைக் கடத்தி வருகிறார்கள்

அதே சமயம் சில பல இயக்குநர்கள் தங்கள் கைவசமுள்ள கதைகளை செப்பனிடுவதிலும், சில பல நடிகைகள் யூ டியூப்-பில் வருமானத்தைப் பார்த்துக் கொண்டும், ஜூம் மீட் நடத்தியும் பொழுதை போக்கி வரும் சூழலில் சில இயக்குநர்கள் ஓடிடி மீடியேட்டராக மாறி பிழைப்பை ஓட்டுகிறார்களாம்.. அதே சமயம் சில சோ கால்ட் புரொடியூசர்கள் தங்களுக்கு சொந்தமான காட்டேஜ், பண்ணைகளில் ஷூட் செய்ய அனுமதித்து வருவதாக ஒரு தகவல் வருது..

இது குறித்து நம்ம இன்ஸ்டாநியூஸ் சினிமா உளவுத்துறையிடம் விசாரிக்கச் சொன்னதில் அவுக கிட்ட இருந்து வந்த ரிப்போர்ட் இது தாங்க

ஆம்.. சின்னத்திரை ஷூட்டிங் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து வருது.. அண்மையில் பிக் பாஸ் மலையாள ஷூட்டிங் குறித்து தகவல் வெளியானதும் அதை அடுத்து அந்த ஃபுளோருக்கே அரசு சீல் வைத்த விவகாரமும் தெரிந்திருக்கும்

ஆனால் இதை எல்லாம் கண்டுக்காம ஒரு மெயின் குரூப் ஷூட் நடத்தியதும் அவிய்ங்களாலே கிட்டத்தட்ட 25 பேருக்கு கொரோனா அட்டாக் நிலையிலும் ஷூட்டிங்கை- இன்னிக்கும் நிப்பாட்டலையாம் . இத்தனைக்கும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி , "மே 31 வரை எந்த ஷூட்டிங்கிலும் - அது சின்னத்திரையாக இருந்தாலும் பெப்சி தொழிலாளர்கள் கலந்து கொள்ள மாட்டாய்ங்க' சொன்னாரு இல்லையா? அதைக் கேட்டு ரெண்டே ரெண்டு நாள் சும்மா இருந்தவய்ங்களை மேற்படி புரொடியூசரில் ஒருத்தர் தன்னிடம் உள்ள லொகேசன்களில் ஷூட் செய்யும் படி சொன்னதை அடுத்து சீரியல் ஷூட் ஜரூரா தொடருது..

அதே சமயம் ஆளுங்கட்சி சேனல்கள் தங்களுடைய பிரமாண்ட ஆபீஸ்களிலேயே தொடரை ஷூட் செஞ்சு வாராய்ங்களாம்..இது பத்தி ஆர்.கே.செல்வமணிகிட்டே கேட்ட போது. ''அரசு அறிவிச்சிருக்கிற தளர்வில்லா லாக்டவுனுக்கு பெப்சி முழு ஆதரவு தருது. இச்சூழலில் நாம ஸ்ட்ரைக் அறிவிக்கலை.

ஆனா ஊரடங்கில் இருக்கோம். ஆனா, இதை கண்டுக்காம யாரோ ஷூட்டிங் நடத்தறாங்கன்னா, அதுலே பெப்சியைச் சேர்ந்த கலைஞர்கள் கலந்துக்கறதுக்கு எந்த தடையுமில்லை. ஆனா, ஏதாவது பிரச்னை வந்தா ஷூட்டிங் நடத்தறவங்கதான் - அதாவது சேனலோ, தயாரிப்பாளர்களோதான் மருத்துவம், இழப்பீட்டுக்கு பொறுப்பேத்துக்கணும்."

அப்படீன்னு சொன்ன நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவிவர்மா, ' என்னங்க பண்றது.. சங்கத்துல இருந்து நடிகர்களுக்கு 'எச்சரிக்கையா இருங்க'ன்னு வேண்டுகோள் விடுக்கலாம். ஆர்டர் போட முடியாது. பிரச்னைகள் வந்தா சம்பந்தப்பட்டவங்க பொறுப்பேத்துக்குவாங்கன்னா போறவங்க போகட்டும்னு விட்டாச்சு.

போன வாரத்துலே இருந்து ஐதராபாத்ல ஷூட்டிங்கிற்கு அனுமதி தர்றாங்கன்னு இங்க இருந்து சில யூனிட்கள் அங்க போய் எடுக்கறாய்ங்க.. அவிய்ங்களை கை, காலை பிடிச்சா போகாதீங்க'ன்னு சொல்ல முடியும்' அப்படீன்னார்.

Updated On: 3 Jun 2021 2:55 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 2. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 3. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி
 4. தொழில்நுட்பம்
  கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'ருத்ரம்-II: இந்தியா வெற்றிகரமாக சோதித்த...
 5. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 6. ஈரோடு
  பெருந்துறை அருகே பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவில் இருந்து மீண்டது
 8. ஈரோடு
  ஈரோட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் கைதான ஆட்டோ
 9. ஈரோடு
  ரூ.35 ஆயிரம் லஞ்சம்: சத்தியமங்கலம் நகர சார்பமைப்பு ஆய்வாளர் உள்பட...
 10. தமிழ்நாடு
  தென்னகத்தை ஆளப்போகும் ராமேஸ்வரம் கஃபே..