தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது
X

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரையுலகத்தினர் தடுப்பூசி போடும் முகாம்

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரையுலகத்தினர் தடுப்பூசி போடும் முகாம் பிலிம்பேர் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

தமிழக முலமைச்சர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், ரோட்டரி கிளப் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரையுலகத்தினர் தடுப்பூசி போடும் முகாம் பிலிம்பேர் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், தலைமையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ரோட்டரி கிளப் தமிழ் திரைப்பட சங்கம் சார்பாக தலைவர் ராமசாமி, செயலாளர்கள் ராதாகிருஷ்ணன்,டி.மன்னன், துணைத்தலைவர் ஆர்கே சுரேஷ், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், ஆல் இந்தியா பிலிம் பெடரேஷன் தலைவர் எஸ் தாணு,

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக தலைவர் பிரசாத் சேர்மன், செயலாளர் ரவி, கில்டு சார்பாக தலைவர் ஜாக்குவார்தங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் திரையுலகினர் திரளாக கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் சார்பாக தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 10 லட்சம் ரூபாயை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சரிடம் வழங்கினார்கள். அதேபோல சங்கத்தில் உள்ள பிரத்தினைகளுக்கு தீர்வு காண உதயநிதி ஸ்டாலினிடம் மனுவும் அளித்தனர்.


திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கை மனுவை உதயநிதி ஸ்டாலினிடம் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி வழங்கினார் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!