கோலிவுட்டில் கொரோனா பீதி! சத்யராஜ், திரிஷாவுக்கு தொற்று பாதிப்பு

கோலிவுட்டில் கொரோனா பீதி! சத்யராஜ், திரிஷாவுக்கு தொற்று பாதிப்பு
X

 நடிகை திரிஷா.

திரையுலகினரை கொரோனா தொற்று ஆட்டுவிக்கிறது. நடிகர் சத்யராஜ், திரிஷா உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில், ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மின்னல் வேகத்தில் தொற்று பரவுவதால், அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடிகர் கமல்ஹாசன், விக்ரம், அர்ஜுன், காமெடி நடிகர் வடிவேலு, அருண் விஜய், நடிகை மீனா உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தற்போது, பிரபல நடிகை த்ரிஷாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை, தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். அதில், எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். எனினும், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறேன். தடுப்பூசிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பிரபல நடிகர் சத்தியராஜுக்கும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை அமைந்தகரை மருத்துவமனையில், அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, மலையாள நடிகர் பிரியதர்ஷன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திரையுலகினர் பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு பரவி வருவது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பையும், கவலையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
ai solutions for small business