நடிகை மீனாவின் மொத்த குடும்பத்தினருக்கும் கொரோனா

X
நடிகை மீனா
By - B.Gowri, Sub-Editor |6 Jan 2022 1:45 PM IST
நடிகை மீனா மற்றும் அவரது ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை, நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகை மீனா வெளியிட்டுள்ள பதிவில், 2022-ஆம் ஆண்டில், எனது வீட்டிற்கு வந்த முதல் பார்வையாளர் கொரோனா. அது என் முழு குடும்பத்தையும் பிடித்துள்ளது. ஆனால் நான் அதை இருக்க விடப்போவதில்லை.
எனவே, பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையோடு இருங்கள். தயவுசெய்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். பொறுப்பாக இருங்கள். இந்த வைரசை பரவ விடாதீர்கள். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.
கடந்த 1990களில் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை மீனா, நீண்ட இடைவெளிக்கு பின்னர், அண்மையில் வெளியான நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார். திரையுலகில் நடிகர் கமல், வடிவேலு, அருண்விஜய் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது, மீனாவுக்கும் பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu