சினிமா நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி

சினிமா நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி
X

 நடிகர் அர்ஜுன்

பிரபல திரைப்பட நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன், தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளவர். பிரபல தமிழ் தொலைக்காட்சியில், ரியாலிட்டி ஷோவையும் நடத்தி, அண்மையில் அதனை நிறைவு செய்தார்.

இந்த சூழலில், நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். தமக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக, அதில் அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், எனினும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் நடிகர் அர்ஜுன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story