லண்டன் சென்று வந்த வடிவேலுவுக்கு கொரோனா

லண்டன் சென்று வந்த வடிவேலுவுக்கு கொரோனா
X
தமிழ் நகைச்சுவை நடிகர் வடிவேலு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

பிரபல காமெடி நடிகர் வடிவேலு, மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த இரு வாரங்களாக லண்டன் சென்றிருந்த நடிகர் வடிவேலு, நேற்று தலைநகர் சென்னைக்கு திரும்பினார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடிவேலுக்கு இருப்பது, ஒமிக்ரான் வகை தொற்று என்றும், அதே நேரம் ஆரம்ப கட்டத்தில் தான் தொற்று இருப்பதால், கவலைப்படும்படி ஏதுமில்லை என்றும் கூறப்படுகிறது. வடிவேலுவுக்கு கொரோனா தொற்று இருக்கும் தகவல், அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
ai in future agriculture