நாளை வருகிறது கூலி அப்டேட்..!

நாளை வருகிறது கூலி அப்டேட்..!
X
நாளை மாலை முதல் கூலி படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திர அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை முதல் கூலி படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திர அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கிறது. இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வருகிறார். விரைவில் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கும் சூழலில், படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் கதாபாத்திர தோற்றம் மற்றும் பெயர்கள் நாளை வெளியாக இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.

கூலி படத்தில் ரஜினிகாந்துடன், கமல்ஹாசன் மகள் ஷ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ், உபேந்திரா, ரச்சிதாராம் ஆகியோரும் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையில், ஒளிப்பதிவு கிரிஷ் கங்காதரன், படத்தொகுப்பு பிலோமின் ராஜ். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
why is ai important to the future