BiggBoss Tamil மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அள்ளி கொடுக்கும் கூல் சுரேஷ்

BiggBoss Tamil மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அள்ளி கொடுக்கும் கூல் சுரேஷ்
X
பிக்பாஸ் சீசன் 7ல் மீம் கிரியேட்டர்களுக்கு கண்டென்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் கூல் சுரேஷ்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஒரே நாளில் இணையத்தில் மீம்ஸ்கள் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்த சீசனில் கூல் சுரேஷ் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டெண்டுகளை வாரி குவித்து கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் கொடுத்த செயின் பித்தளமாம்!

பிக் பாஸ் அறிமுக மேடையில் நடிகர் கமல், கூல் சுரேஷ்காக சுரேஷ் என்று பெயர் பதிக்கப்பட்டு இருந்த செயின் ஒன்றை கொடுத்து கூல் என்ற பெயர் நீங்கள் உங்களுக்காக வைத்துக் கொண்டது. சுரேஷ் என்ற பெயரை இனி ரசிகர்களுக்கு நீங்கள் காட்டுங்கள் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அது குறித்து பிக் பாஸ் வீட்டிற்குள் போனதும் கேமரா முன்பு கூல் சுரேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார். அப்போது நீங்க நினைக்கிற மாதிரி பிக் பாஸ் தந்தது தங்க செயின் எல்லாம் கிடையாது. பித்தள செயின் தான் என்று அவர் சொல்லி இருப்பது தற்போது மீம்ஸாக வலம் வருகிறது.

தலைவன் வேற ரகம் பார்த்து உசாரு!

பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கூல் சுரேஷ் இளைஞர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியத்தை சொல்லி உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க அதுவும் தற்போது தலைவன் வேற ரகம் பார்த்து உசாரு என்று ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு மீம்ஸாக வெளியாகி இருக்கிறது.

24 மணி நேரத்தில் இரண்டு வீடு!

பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் என்ட்ரி ஆகி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் போட்டியாளர்களை இரண்டு வீடாக வீட்டில் பிரித்து விட்டதால் "இது என்ன ஆடி மாசமா? இப்படி 24 மணி நேரம் கூட ஆகாம அதுக்குள்ள பிரிச்சு வச்சிருக்கீங்களே...?" என்றும் சில மீம்ஸ் வைரலாகி வருகிறது.

எலிமினேஷன் லிஸ்ட்டில் பாவா செல்லதுரை!

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் பாவா செல்லதுரை கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் எலிமினேஷன் லிஸ்டிலும் இருக்கிறார்.

கன்ஸ்சக்சன் ரூம் என்றால் என்ன?

பிக் பாஸ் வீட்டிற்குள் போன சீசனில் ஜி பி முத்து ஆதாம் ஏவாள் என்றால் யார் என்று தெரியாது தெரியாமல் சொன்னது போல நடிகர் கூல் சுரேஷ் கன்ஸ்சக்சன் ரூம் என்றால் என்னவென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அது குறித்தும் "கூல் சுரேஷ் உங்க கிட்ட மாட்டல பிக் பாஸ், நீங்கதான் அவங்க கிட்ட மாட்டிட்டு இருக்கீங்க" என்றும் ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது.

இந்தாண்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூல் சுரேஷ் ஒரு வரப்பிரசாதம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அவரது அதிரடி நடவடிக்கைகள் மற்றும் கருத்துக்கள் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஏராளமான கண்டெண்டை வழங்கி வருகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது