அவதூறு பேச்சு - 'பயில்வான்' ரங்கநாதனை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை

அவதூறு பேச்சு - பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை
X

Controversial speech : Celebrites demand Bayilwan Ranganathan arrest - அவதூறு பேச்சு - ‘பயில்வான்’ ரங்கநாதனை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை

Controversial speech : Celebrites demand Bayilwan Ranganathan arrest - இவரின் இதுபோன்ற பேச்சுகளுக்கு, தயாரிப்பாளர் கே. ராஜன் நடிகை ராதிகா, பின்னணிப் பாடகி சுசித்ரா உள்ளிட்டோர் வெளிப்படையாகவே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Controversial speech : Celebrites demand Bayilwan Ranganathan arrest - சினிமா நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்திலும், திரைத்துறையினர் தொடர்பாக அவதூறு கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வரும் நடிருகம், திரைவிமர்சகருமான 'பயில்வான்' ரங்கநாதனை கைது செய்ய பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

நடிகர் 'பயில்வான்' ரங்கநாதன், 1980ஆம் ஆண்டு வாக்கில் இருந்தே, தமிழ் சினிமாத்துறையில் நடித்து வருகிறார். எம்.ஜி.ஆர் படத்திலும் இவர் தலைகாட்டி இருக்கிறார். அடியாள், குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர் என பல்வேறு வேடங்களிலும் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சமீபகாலமாக, அவர் திரைவிமர்சகர் அவதாரம் எடுத்து உள்ளார். சினிமா குறித்த அரிய தகவல்களை தெரிவித்து வந்ததால், இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, மக்களிடையே பெரும்பிரபலம் ஆனது. இந்நிலையில், இவர் நடிகர், நடிகைகள் மற்றும் அவர்களின் அந்தரங்கம் குறித்து யூடியூப் சேனலில், வெளிப்படையாக ஆபாசமாக பேசத் துவங்கினார். இது நடிகர், நடிகையர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Controverial speech : Celebrites demand Bayilwan Ranganathan arrest - இவரின் இதுபோன்ற பேச்சுகளுக்கு, தயாரிப்பாளர் கே. ராஜன் நடிகை ராதிகா, பின்னணிப் பாடகி சுசித்ரா உள்ளிட்டோர் வெளிப்படையாகவே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுமட்டுமல்லாது, 'பயில்வான்' ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தயாரிப்பாளர் கே.ராஜன் மற்றும் சுசித்ரா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்த விவகாரத்தில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, சுசித்ரா வலியுறுத்தி உள்ளார்.

இதன்காரணமாக, சிறிதுகாலம் அமைதியாக இருந்த 'பயில்வான்' ரங்கநாதன், தற்போது மீண்டும் அவரது 'வழக்கமான' பாணிக்கு திரும்பி உள்ளார்.

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'இரவின் நிழல்' படத்தில் நடித்த நடிகைகள் குறித்து 'பயில்வான்' ரங்கநாதன் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், திருவான்மியூர் கடற்கரைப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்த 'பயில்வான்' ரங்காநாதனிடம், இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகையான ரேகா நாயர் நேருக்கு நேர் சண்டை போட்டார். ரேகா நாயருக்கு போட்டியாக அவரும் கத்த அந்த இடமே சிறிதுநேரத்தில் களேபரமானது. இவர்கள் இருவரும் சண்டை போடும் வீடியோ, சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவியது.

Controverial speech : Celebrites demand Bayilwan Ranganathan arrest - இந்நிலையில், 'பயில்வான்' ரங்கநாதன், யூடியூப் சேனலிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் பேச நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து உள்ளன.

எவ்வித ஆதாரங்களும் இன்றி அவர் நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து வாய்க்கு வந்தபடி பேசி வருவதாக தெரிவித்து உள்ள திரைத்துறையினர், அவர் மீது கோர்ட்டில் குற்றவியல் வழக்கு தொடரவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!